MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 'கேம் சேஞ்சர்' படத்தின் கிளைமேக்ஸ் நிறைவு..! நாளை முதல் இந்தியன் 2 படப்பிடிப்பில் கவனம் செலுத்தும் ஷங்கர்!

'கேம் சேஞ்சர்' படத்தின் கிளைமேக்ஸ் நிறைவு..! நாளை முதல் இந்தியன் 2 படப்பிடிப்பில் கவனம் செலுத்தும் ஷங்கர்!

கேம்  சேஞ்சர் படத்தின் கிளைமேக்ஸ் காட்சி நிறைவடைந்து விட்டதாக இயக்குனர் ஷங்கர் புகைப்படம் வெளியிட்டு தெரிவித்துள்ள நிலையில், நாளை முதல் இந்தியன் 2 படப்பிடிப்பில் கவனம் செலுத்த உள்ளார். 

2 Min read
Author : manimegalai a
Published : May 10 2023, 12:41 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

ராம் சரணை வைத்து இயக்குனர் ஷங்கர் இயக்கி வந்த 'கேம் சேஞ்சர்' திரைப்படம் இன்றுடன் முடிவடைந்து விட்டதாக இயக்குனர் ஷங்கர் தெரிவித்துள்ளதோடு, இந்தியன் 2 படத்தின் அப்டேட் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

26

இந்தியன் 2 திரைப்படம் வெளியாகி இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், கமல் நடிப்பில் இப்படத்தின் 2 ஆம் பாகமும் தற்போது உருவாகி வருவதால், 2 ஆம் பாகத்தின் மீதான ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் சற்று மேலோங்கியே காணப்படுகிறது.

அடடா... படிப்பிலும் நடிகை தேவயானி பொண்ணு சமத்து தான்! +2 மதிப்பெண் குறித்து வெளியான தகவல்!
 

36

இந்தியன் 2 படம் குறித்த தகவல் 2019 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட நிலையில், அடுத்தடுத்து சில பிரச்சனைகள் மற்றும் கொரோனா பெருந்தொற்று பரவியதால் இப்படத்தின் படப்பிடிப்பு பாதியிலேயே நின்றது. பின்னர் இயக்குனர் சங்கர் கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தை கைவிட்டுவிட்டு, அடுத்ததாக நடிகர் ராம் சரணை வைத்து இயக்கி வரும் கேம் சேஞ்சர் படத்தின் படப்பிடிப்பில் கவனம் செலுத்த துவங்கினார்.

46

பின்னர் கோர்ட் வரை சென்று, இந்தியன் 2 படத்திற்கு விடிவு காலம் கிடைத்த நிலையில், இரண்டு படங்களையும் ஒரே சமயத்தில் இயக்கி வந்தார் ஷங்கர். இந்நிலையில் ராம்சரண் நடிப்பில் உருவான கேம் சேஞ்சர் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி இன்றுடன் முடிவடைந்து விட்டதாக சமூக வலைதளத்தில் பட சூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார்.

+2 தேர்வில் தேர்ச்சி பெற்ற... போண்டா மணி மகள் படிப்புச் செலவை ஏற்றுக் கொண்ட பிரபல தயாரிப்பாளர்!

56

மேலும் நாளை முதல், இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பில் கவனம் செலுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களாக உள்ளன. கமலஹாசன் நடிப்பில் கடைசியாக வெளியான விக்ரம் படத்தின் மெகா ஹிட் வெற்றிக்குப் பின்னர், இந்தியன் 2 படம் வெளியாக உள்ளது. அது மட்டும் இன்றி இது கமல் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற இரண்டாம் பாகம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

66

அதே போல் நடிகர் ராம்சரண் நடித்த ஆர் ஆர் ஆர் படத்தின் வெற்றிக்கு பின்னர், கேம் சேஞ்சர் படத்தில் தான் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
கமல்ஹாசன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
அரிசி வாங்கக் கூட காசு இல்ல; இன்று கோடிகளில் சொத்து! வறுமையை வென்று சாதித்த நடிகர் சிங்கமுத்துவின் வாழ்க்கை கதை!
Recommended image2
அஜித் - விஜய் இருவரும் சேர்ந்து நடித்த 'அந்த' சூப்பர் ஹிட் படங்கள் எவை? இதோ முழு விவரம்!
Recommended image3
மகனுக்காக சொத்தை உதறிய செல்வநாயகி! தனிமையில் வாடும் சத்யா - விறுவிறுப்பான எபிசோட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved