வங்கி ஊழியர்களுக்கு போக்கு காட்டிய ரவி மோகன் - ஒரேயடியாய் ஆப்பு வைத்த அதிகாரிகள்!
Bank officials pasted a seizure notice at Actor Ravi Mohan house : நடிகர் ரவி மோகனுக்கு சொந்தமாக இசிஆரில் உள்ள, பங்களாவுக்கு முறையாக EMI கட்ட தவறியதால், அதிகாரிகள் அந்த வீட்டிற்கு தற்போது ஜப்தி நோட்டீஸ் ஒட்டி உள்ளனர்.

ரவி மோகன் விவாகரத்து:
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ரவி மோகன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தன்னுடைய காதல் மனைவி ஆர்த்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவரை விட்டு பிரியப் போவதாக கூறி அதிர்ச்சி கொடுத்தார். ரவி தரப்பில் இருந்து, ஆர்த்தி மற்றும் அவருடைய பெற்றோர் மீது பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. ஆர்த்தியும் அறிக்கை வெளியிட்டு மீண்டும் ரவியுடன் மீண்டும் சேர தயாராக இருப்பதாக அறிவித்தார்.
ரேவதி ஆபரேஷனில் ஏற்பட்ட சிக்கல்... கார்த்தி செய்யப்போவது என்ன? கார்த்திகை தீபம் 2 அப்டேட்!
கெனிஷாவுடன் காதல்:
ஆனால் ரவி மோகன் தன்னுடைய விவாகரத்தில் உறுதியாக உள்ளதாக இருப்பதாக அறிவித்ததோடு, விவாகரத்து கேட்டு குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவர்களுடைய விவாகரத்து வழக்கு ஒருபுறம் பரபரப்பாக சென்று கொண்டு இருக்கும் நிலையில், ரவி மோகன் பிரபல பாடகியான கெனிஷாவை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இதை உறுதி செய்யும் விதமாக ஜெனிஷா மற்றும் ரவி மோகன் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
EMI கட்டாத ரவி மோகன்:
ரவி மோகன் ஆர்த்தியுடன் வாழ்ந்த போது, ஈசிஆரில் உள்ள ஒரு பங்களாவை தன்னுடைய மனைவி ஆர்த்தியின் பெயரில் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த பங்களாவுக்கு மாத மாதம் செலுத்த வேண்டிய ஈ எம் ஐ தொகையை ரவி மோகன் செலுத்தாததால் வங்கி அதிகாரிகளுக்கு போக்கு காட்டி வந்தார். இது குறித்து பதில் அளிக்குமாறு பலமுறை கடிதம் மூலம் தகவல் அனுப்பியும், ரவி மோகன் தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் கொடுக்கப்படவில்லை. அதேபோல் சுமார் 11 மாதங்கள் முறையாக தவணை கட்டாத நிலையில், கடந்த மாதம் வங்கி அதிகாரிகள் வீட்டிற்கு ஜப்தி நோட்டீஸ் ஓட்ட வந்தபோது அதனை அனுமதிக்காத ரவி மோகன் வங்கி அதிகாரிகளிடம் நேரடியாக வந்து பேசுவதாக கூறி அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.
ரவி மோகன் பங்களாவுக்கு ஜப்தி நோட்டீஸ்:
ஆனால் ரவி மோகன் வங்கி ஊழியர்களுக்கு முறையான பதில் கொடுக்காத நிலையில், தற்போது வாங்கி ஊழியர்கள் ரவி மோகனின் ஈசிஆர் பங்களாவை பங்களாவுக்கு ஜப்தி நோட்டீஸ் ஒட்டி உள்ளனர். இந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.