- Home
- Cinema
- முக்கிய ஆதாரம் கொடுத்த ஜாய் கிரிசில்டா.. மாதம்பட்டிக்கு சுத்துப் போட்ட காவல்துறை.. வீட்டுக்கே பறந்த சம்மன்!
முக்கிய ஆதாரம் கொடுத்த ஜாய் கிரிசில்டா.. மாதம்பட்டிக்கு சுத்துப் போட்ட காவல்துறை.. வீட்டுக்கே பறந்த சம்மன்!
ஜாய் கிரிசில்டா கொடுத்த புகாரில் பேரில் விசாரணைக்கு ஆஜராகும்படி மாதம்பட்டி ரங்கராஜுக்கு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. மாதம்பட்டி தன்னை கப்பமாக்கி ஏமாற்றி விட்டதாக ஜாய் கிரிசில்டா குற்றம்சாட்டி வருகிறார்.

மாதம்பட்டி ரங்கராஜ்- ஜாய் கிரிசில்டா விவகாரம்
பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ். மெஹந்தி சர்க்கஸ், பெண்குயின் போன்ற படங்களில் நடித்துள்ள இவர் தனது சமையல் கலையின் மூலம் பிரபலமானார். அவரது கேட்டரிங் நிறுவனம் உலகளவில் பெயர் பெற்றது. இதனால் மாதம்பட்டி ரங்கராஜை விஜய் டிவி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக்கியது. மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஸ்ருதி என்பவருடன் திருமணம் ஆகி இரண்டு மகன்கள் உள்ளனர்.
மாதம்பட்டி ரங்கராஜ் ஏமாற்றி விட்டார்
இதற்கிடையே மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை கப்பமாக்கி ஏமாற்றி விட்டதாக அவரது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா பரபரப்பு குற்றம்சாட்டினார். தொடர்ந்து மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை கோயிலில் திருமணம் செய்த புகைப்படத்தை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா, மாதம்பட்டி தன்னுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தினார். தொடர்ந்து மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக சென்னை காவல்துறை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.
முதல்வரிடம் கோரிக்கை விடுத்த ஜாய் கிரிசில்டா
இதன்பிறகு மாதம்படிக்கு உள்ள செல்வாக்கு, பணம் பலம் காரணமாக தனது புகார் மனு மீது காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறிய ஜாய் கிரிசில்டா, இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்திருந்தார். 'தனக்கு நீதி வாங்கி கொடுங்கள் அப்பா' என்று கூறியிருந்தார். இதன்பிறகு தான் அவரது புகாரை காவல்துறை விசாரணைக்கு எடுத்தது.
ஜாய் கிரிசில்டாவிடம் 6 மணி நேரம் விசாரணை
இதனைத் தொடர்நது ஜாய் கிரிசில்டா, சென்னை ஆயிரம் விளக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். சுமார் 6 மணி நேரம் பல்வேறு கேள்விகளை கேட்டு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''எனக்கும், எனது குழந்தைக்கும் நீதி வேண்டும். இதற்காக நான் எந்த எல்லைக்கும் சென்று போராடுவேன். இந்த விவகாரத்தில் காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்பிக்கை உள்ளது'' என்றார்.
மாதம்பட்டி ரங்கராஜுக்கு காவல்துறை சம்மன்
இந்நிலையில், ஜாய் கிரிசில்டா கொடுத்த புகார் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி மாதம்பட்டி ரங்கராஜுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அதாவது வருகிற 26ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் ஜாய் கிரிசில்டா, மாதம்படி விவகாரம் சூடுபிடித்துள்ளது.