- Home
- Cinema
- ரேவதி ஆபரேஷனில் ஏற்பட்ட சிக்கல்... கார்த்தி செய்யப்போவது என்ன? கார்த்திகை தீபம் 2 அப்டேட்!
ரேவதி ஆபரேஷனில் ஏற்பட்ட சிக்கல்... கார்த்தி செய்யப்போவது என்ன? கார்த்திகை தீபம் 2 அப்டேட்!
Karthigai Deepam 2 Serial September 24th Episode Update: கார்த்திகை தீபம் 2 சீரியலில் நேற்றைய எபிசோடில், ரேவதி ஆபரேஷனில் சிக்கல் ஏற்பட்ட நிலையில், இன்று நடக்கப்போவது குறித்து பார்ப்போம்.

மருத்துவரிடம் கெஞ்சும் கார்த்திக்:
அதாவது, மருத்துவர்கள் ரேவதிக்கு ஆபரேஷன் செய்ய அறிவுறுத்தி இருந்தாலும், ஆபரேஷன் செய்ய வேண்டிய டாக்டர், அமெரிக்கா செல்ல இருப்பதால் அவரால் அந்த ஆபரேஷனை செய்ய முடியாது என கூறுகிறார். இந்த விஷயத்தை அறியும் கார்த்திக், ரேவதிக்கு ஆபரேஷன் செய்துவிட்டு அமெரிக்கா செல்லும்படி மருத்துவரிடம் கெஞ்சுகிறான். இதனால் அவருக்கு ஏற்படும் நஷ்டத்தை தானே கொடுப்பதாகவும் கூறுகிறான்.
ஐசியூவில் கந்த சஷ்டி கவசம்:
கார்த்தியின் முயற்சிகள் ஒருபக்கம் தொடர்ந்து கொண்டிருக்க, மற்றொரு பக்கம் முருக பக்தர்கள் ஹாஸ்பிடலுக்கு வந்து ஐசியூவில் கந்த சஷ்டி கவசம் படித்து ரேவதிக்கு பிரசாதம் வைத்து விடுகின்றனர். கூடிய விரைவில் குணமடைந்து விடுவாள் என்று ஆறுதல் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்கள்.
சூப்பர் ஸ்டார் ஆசியுடன்... சினிமாவில் கால்பதிக்கும் ஜெர்மனி வம்சாவெளியை சேர்ந்த தமிழன்!
மாரியை தேடி செல்லும் கார்த்திக்:
மேலும் ரேவதிக்கு ரத்தம் தேவைப்படுவதாகவும் அது அரிய வகை ரத்தம் என்பதும் மாரி என்பவருக்கு அந்த வகை ரத்தம் இருப்பதும் தெரியவந்து மாரியை தொடர்பு கொண்டு பேசுகின்றனர். பிறகு கார்த்திக் நானே நேரடியாக வந்து உங்களை அழைத்துக் கொள்கிறேன் என்று சொல்கிறான்.
உண்மையை உடைக்கும் காளியம்மா:
அடுத்ததாக காளியம்மாள் வீட்டுக்கு வரும் சிவனாண்டி, மாயா ரேவதியை சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிய விஷயத்தை சொல்கிறான். இதை கேட்டதும் காளியம்மா சிரித்தபடி, மாயா இந்த வீட்டில் தான் இருக்கிறாள் என்ற உண்மையை உடைக்கிறாள். தொடர்ந்து பேசும் காளியம்மா, ரேவதி இறந்த செய்தி கேட்டால் தான் தனக்கு சந்தோஷம் என கோவமாக சொல்கிறாள். இப்படியான நிலையில், அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியை பாருங்கள்.