- Home
- Cinema
- சண்முகத்தை கொல்ல முடிவெடுத்த வைஜெயந்தி - அடுத்தடுத்து காத்திருக்கும் திருப்பம் ? அண்ணா சீரியல் அப்டேட்!
சண்முகத்தை கொல்ல முடிவெடுத்த வைஜெயந்தி - அடுத்தடுத்து காத்திருக்கும் திருப்பம் ? அண்ணா சீரியல் அப்டேட்!
Zee Tamil Anna Serial: அண்ணா சீரியலின் சண்முகத்தை கொல்ல முடிவெடுத்த வைஜெயந்தி குறித்த பரபரப்பான அப்டேட் குறித்தும் அடுத்தடுத்து காத்திருக்கும் திருப்பம் பற்றியும் பார்க்கலாம்.

மடக்கி பிடித்த வீரா:
திங்கள் முதல் சனி வரை, வாரம் 6 நாட்களும் எதிர்பாராத திருப்பு முனையுடன் ஒளிபரப்பாகி வரும் அண்ணா சீரியலில், கௌதம் போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க முயற்சி செய்ய, வீரா அவனை ஒருவழியாக மடக்கி பிடிக்கிறாள். இதனை தொடர்ந்து அறிவழகன் நான் வெளியே வருவேன் என்கிற நம்பிக்கையே இல்லாமல் இருந்தேன். ஆனால் இப்போது உங்களால எனக்கு நம்பிக்கை வந்துடுச்சி என்று உருக்கமாக பேசுகிறான்.
ரேவதி ஆபரேஷனில் ஏற்பட்ட சிக்கல்... கார்த்தி செய்யப்போவது என்ன? கார்த்திகை தீபம் 2 அப்டேட்!
சண்முகத்தை கொள்ள துடிக்கும் வைஜெயந்தி:
இதை தொடர்ந்து, சிவனாண்டி இது மாலதி கேஸ்னு மட்டும் தான் நினைச்சேன், இப்போ உங்க பையனும் இதுல சம்மந்தப்பட்ட இருக்காரு. அடுத்த முறை சண்முகத்தை சும்மா விட மாட்டேன். கண்டிப்பா தோற்கடிப்பேன் என்று சொல்கிறான். இதை தொடர்ந்து பேசும் வைஜெயந்தி, சண்முகத்தை பழிவாங்கும் நோக்கில், எப்படியும் பரணி மற்றும் சண்முகத்தை கொலை செய்ய முடிவெடுக்கிறாள்.
சூப்பர் ஸ்டார் ஆசியுடன்... சினிமாவில் கால்பதிக்கும் ஜெர்மனி வம்சாவெளியை சேர்ந்த தமிழன்!
தங்கைகளின் மகிழ்ச்சி:
அடுத்து சண்முகம் வீட்டிற்கு வர, வக்கீல் போல் வாதாடி வெற்றி பெற்ற அவனுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்று, அவனின் தங்கைகள் சந்தோசப்படுகின்றனர். அடுத்ததாக இசக்கிக்கு கட்டுசோறு கட்டிட்டு போக முடிவெடுக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய, அண்ணா சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் தொடர்ந்து பாருங்கள்.