வாழ்க்கையின் அர்த்தத்தை கற்றுக் கொடுத்தாய்! மகள் பிறந்த நாளில் கியூட் புகைப்படங்களை வெளியிட்டு உருகிய சினேகா!
நடிகை சினேகாவின் மகள் ஆத்யாந்தா இன்று தன்னுடைய 3-வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அவரது கியூட் புகைப்படங்களை வெளியிட்டு உருக்கமாக இவர் போட்டுள்ள பதிவு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
நடிகை சினேகா இன்று தன்னுடைய மகள் ஆத்யாந்தா மூன்றாவது பிறந்தநாள் கொண்டாடுவதை முன்னிட்டு அவரது கியூட் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் சினேகா, 90-ஸ் கிட்சின்கனவு கன்னியாக வலம் வந்த இவர் மலையாளத் திரை உலகின் மூலம் சினிமாவுக்குள் என்ட்ரி கொடுத்தார்.
இதைத்தொடர்ந்து தமிழில் அறிமுகமான சிநேகாவிற்கு அடுத்தடுத்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது.
குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான ஆனந்தம், பார்த்தாலே பரவசம், பம்மல் கே சம்பந்தம், புன்னகை தேசம், உன்னை நினைத்து, போன்ற படங்கள் வரிசையாக ஹிட் லிஸ்டில் இணைந்ததால் முன்னணி நடிகையாக மாறினார்.
வாரிசு, பாகுபலி படங்களில் பணியாற்றிய பிரபலத்தின் கணவரும், இயக்குனருமான ஹரிச்சரண் சீனிவாசன் மரணம்!
இவர் நடிப்பில் வெளியான ஆட்டோகிராப், புதுப்பேட்டை, பள்ளிக்கூடம், போன்ற திரைப்படங்கள் தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் அதிகம் ரசிக்கப்படும் படங்களாக உள்ளன.
முன்னணி நடிகையாக இருக்கும் போதே, நடிகர் பிரசன்னாவுடன் இணைந்து நடிக்கும் போது, அவர் மீது காதல் கொண்ட சினேகா, 2011 ஆம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டார்.
பல இளம் நட்சத்திர ஜோடிகளுக்கு, எடுத்துக்காட்டாக மிகவும் ஒற்றுமையான நட்சத்திர தம்பதிகளாக வாழ்ந்து வரும் சினேகா - பிரசன்னா ஜோடிக்கு, தங்களின் காதலின் அடையாளமாக விகான் என்கிற மகனும் ஆத்யாந்தா என்கிற மகள் ஒருவரும் உள்ளனர்.
இந்நிலையில் தன்னுடைய மகள் ஆத்யானந்தாவின் மூன்றாவது பிறந்த நாளை நடிகை சினேகா மிகவும் சிறப்பாக இன்று கொண்டாடி வருகிறார்.
குளிக்கும் வீடியோவிற்கு குவிந்த ஆபாச கமெண்ட்.... நடிகை கஸ்தூரி கொடுத்த ‘நச்’ ரிப்ளை
மகளின் பிறந்தநாளை முன்னிட்டு மகளின் க்யூட் புகைப்படங்கள் சிலவற்றை, சமூக வலைதளத்தில் இவர் வெளியிட அந்த புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
மேலும் மிகவும் உருக்கமாக... பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் சூரிய ஒளியே! நீ என் இதயத்தை நிரப்புகிறாய், நீ என் உலகத்தை நிரப்புகிறாய், நீ என் ஆன்மாவை நிரப்புகிறாய். நீங்கள் என் மீது பொழியும் அன்பு பிரபஞ்சத்தில் மிக அழகான விஷயம். எப்போதும் ஒரே குறும்பு, அக்கறை, அன்புடன் இருங்கள். வாழ்க்கையின் அர்த்தத்தை எங்களுக்குக் கற்றுக் கொடுத்தாய்... உன்னை அதிகம் நேசிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
சினேகாவின் புகைப்படங்கள் மற்றும் பதிவு வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது. தற்போது மகன் மற்றும் மகள் ஆகிய இருவரும் நன்கு வளர்ந்து விட்டதால் அடுத்தடுத்து சினேகா சிலபடங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார் என கூறப்படுகிறது.
மீண்டும் திரையுலகில் என்ட்ரி கொடுப்பதற்காக உடல் எடையை வெகுவாக குறைத்து... ஸ்லிம் ஃபிட் லுக்கில் அவ்வப்போது இவர் வெளியிடும் போட்டோ சூட் புகட்டடங்கள் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.