வாரிசு, பாகுபலி படங்களில் பணியாற்றிய பிரபலத்தின் கணவரும், இயக்குனருமான ஹரிச்சரண் சீனிவாசன் மரணம்!

'தூவானம்'  படத்தின் இயக்குனர் ஹரிச்சரண் சீனிவாசன் மறைவு, திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Thoovanam movie director haricharan srinivasan shocking death


கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியாகி, விமர்சனம் ரீதியாக பாராட்டுகளை பெற்ற திரைப்படம் 'தூவானம்'. இந்த படத்தை இயக்குனர் ஹார்ச்சரண் சீனிவாசன் தன்னுடைய தோழர் நியூட்டனுடன் இணைந்து இயக்கியிருந்தார். அதேபோல் கடந்த 2008 ஆம் ஆண்டு, ஜெயா டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த 26 எபிசோடுகளை கொண்ட பிரபல டேபிள் டென்னிஸ் வீரர் வி. சந்திரசேகரின் பயோபிக்கை சீரியலாக தொலைக்காட்சிக்கு இயக்கிய பெருமை இயக்குனர் ஹரிச்சரண் சீனிவாசனை தான் சேரும்.

Thoovanam movie director haricharan srinivasan shocking death

தமிழகத்தை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரரான வி.சந்திரசேகர். மூன்று முறை டேபிள் டென்னிஸ் போட்டியில் தேசிய அளவில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றவர். மேலும் அர்ஜுனா விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில வருடங்களாகவே பிரபலங்கள், மற்றும் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையை படமாகுவாக்குவது அதிகரித்து வரும் நிலையில், இதனை 2008 ஆம் ஆண்டே செய்து காட்டினார் ஹரிச்சரண்.

Thoovanam movie director haricharan srinivasan shocking death

திரைப்படம் மற்றும் சீரியல் இயக்குவதை தாண்டி,  சில படங்களிலும் திரைக்கதையும் எழுதியுள்ளார். பன்முக திறமை கொண்ட கலைஞராக விளங்கிய இவருடைய மறைவு திரையுலகை சேர்ந்தவர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Thoovanam movie director haricharan srinivasan shocking death

இவருடைய மனைவி ரேக்சும் திரையுலகில் மிகவும் பிரபலமானவர் பெண்மணியாவார். தமிழில் வெளியான சுமார் 500க்கும் மேற்பட்ட படங்களுக்கு சப் டைட்டில் எழுதியுள்ளார். குறிப்பாக பாகுபலி, வாரிசு, எந்திரன், விக்ரம் போன்ற படங்களும் அடங்கும். தற்போது திரையுலகை சேர்ந்த, பிரபலங்கள் பலர்... இயக்குனர் ஹரிச்சரண் ஸ்ரீனிவாசன் மறைவுக்கு தங்களின் இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள்.

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios