யார் இந்த விக்ரமன்? வெற்றிவாய்ப்பை கடைசி நேரத்தில் நழுவ விட என்ன காரணம்..! ஆச்சரியப்படுத்தும் தகவல்கள்!
விஜய் டிவி தொலைக்காட்சியில், நேற்று நடந்து முடிந்துள்ள 'பிக்பாஸ்' சீசன் 6 நிகழ்ச்சியில் முதல் ரன்னர்அப் - பான விக்ரமன் யார்? என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானாலும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இதில் கலந்து கொண்டு பைனலில் வெற்றி பெறுவார் என பலரும் எதிர்பார்த்த விக்ரமன் யார் தெரியுமா?
vikraman
பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமான முதல் வாரத்தில் இருந்தே சண்டை, சச்சரவு என துவங்கி 100 நாட்களை கடந்தும், அதே பரபரப்புடன் தான் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்தது. இதில் கண்டிப்பாக வெற்றி பெறுவார் என பலரும் எதிர்பார்த்த போட்டியாளர் என்றால் அவர் விக்ரமன் தான். ஆனால் கடைசி நேரத்தில் அசீம், விக்ரமனின் வெற்றி வாய்ப்பை தட்டிச் சென்றது பலரையும் அதிர்ச்சி அடைய செய்தது. மேலும் இதற்காக பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வந்தாலும், ஒரு அரசியல்வாதி போர்வையில் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த விக்ரமன் யார் என்கிற தேடலும்... அதிகரித்துள்ளது.
விக்ரமனின் முழு பெயர் விக்ரமன் ராதாகிருஷ்ணன். இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்து, தேனியில் வளர்ந்தவர். தமிழை விருப்ப பாடமாக தேர்வு செய்து படித்தவர். 34 வயதாகியும் விக்ரமன் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல், விடுதலை சிறுத்தை கட்சியில் இணைந்து அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் என்பது அனைவரும் அறிந்தது தான்.
கடந்த 2016 ஆம் ஆண்டு, 'நடந்தது என்ன? குற்றம் பின்னணி' என்கிற நிகழ்ச்சியை விஜய் டிவியில் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, சன் டிவியில் 'இ எம் ஐ தவணை முறை வாழ்க்கை' என்கிற சீரியலில் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து, அதை ஆண்டு விஜய் டிவியில் துவங்கப்பட்ட 'விண்ணைத்தாண்டி வருவாயா' என்கிற சீரியலில் நடித்து மிகவும் பிரபலமானார்.
பின்னர் தன்னுடைய பத்திரிக்கையாளர் பிரவேசத்தை துவங்கினார் விக்ரமன். புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நிருபராக இருந்த இவர், பின்னர் தன்னுடைய திறமையால் கலாட்டா மீடியாவில் பொலிடிக்கல் எடிட்டர் ஆகவும் பணியாற்றினார். பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு தீவிர அரசியலில் கவனம் செலுத்த துவங்கினார். கடந்த 2020 ஆம் ஆண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்த பின்னர் குறுகிய காலத்திலேயே அந்த கட்சியின் செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டார்.
அரசியல் சார்ந்த விவாதங்களில் பெரும்பாலும் பங்கு கொள்ளும் இவர், தொடர்ந்து சமூக பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்து வருகிறார். குறிப்பாக ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் பல பதிவுகளையும், பாஜக கட்சிக்கு எதிராக இவர் போடும் ட்வீட் சில சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
கதாநாயகி ஆனதும் கூடிய அழகு... இளசுகளை கவர்ந்திழுக்கும் குட்டி நயன் அனிகாவின் அசத்தல் போட்டோஸ்!
ஒரு அரசியல்வாதியாக அனைவராலும் அறியப்பட்ட விக்ரமன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு என்ன செய்யப் போகிறார் என்பது பலரது கேள்வியாக இருந்த நிலையில், அனைவருடைய மனதையும் வென்று, டைட்டில் வின்னர் ஆக மாறுவார் என்கிற நம்பிக்கை, ரசிகர்கள் மத்தியில் இருந்த நிலையில்... கடைசி நேரத்தில் இவருடைய வெற்றி வாய்ப்பு கைநழுவி அசீமின் பக்கம் சாய்ந்தது.
அசீம் பிக்பாஸ் வீட்டில் நுழைந்த முதல் நாளில் இருந்தே, சர்ச்சைக்குரிய மனிதராக பார்க்கப்பட்டவர். கமலஹாசன் பிக்பாஸ் டைட்டிலை யார் வெல்லக்கூடாது என நினைக்கிறீர்கள் என போட்டியாளர்கள் மத்தியில் கேள்வி எழுப்பிய போது கூட, அசீமின் பெயரை தான் அனைவரும் கூறினர். அப்படி இருக்கையில் இந்த வெற்றி எப்படி சாத்தியமானது என்பது பலருக்கும் புரியாத புதிராக இருந்து வரும் நிலையில், இதற்கு முக்கிய காரணமாக நெட்டிசன்கள் கூறி வருவது விக்ரமனின் பிக்பாஸ் போட்டியின் உள்ளே நுழைந்த அரசியல் தலையீடு தான்.
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் பட்டத்தை தட்டி சென்றார் அஸிம்!!
சின்னத்திரை, அரசியல் என போன்றவற்றில் கலக்கியுள்ள விக்ரமன்... விரைவில் வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.