வாய்ப்புக்காக இப்படியா? குட்டை டவுசரில் கவர்ச்சி போஸ் கொடுத்த லாஸ்லியாவை கமெண்டில் தெறிக்கவிடும் நெட்டிசன்கள்!
பிக்பாஸ் லாஸ்லியாவின் தற்போதைய புகைப்படத்தை பார்த்து, நெட்டிசன்கள் தாறுமாறாக கமெண்ட் போட்டு வருகிறார்கள்.
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் இலங்கையை சேர்ந்த தொகுப்பாளரான லாஸ்லியா.
தன்னுடைய படிப்பை முடித்த பின்னர், ஐடி துறையில் வேலைக்கு சேர்ந்த இவர், அந்த வேலையை உதறிவிட்டு சக்தி தொலைக்காட்சியில், செய்திவாசிப்பாளராக 2012 ஆம் ஆண்டு தன்னுடைய பணியை துவங்கினார்.
குளிக்கும் வீடியோவிற்கு குவிந்த ஆபாச கமெண்ட்.... நடிகை கஸ்தூரி கொடுத்த ‘நச்’ ரிப்ளை
இதன் பின்னர் குட் மார்னிங் ஸ்ரீலங்கா உள்ளிட்ட சில நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதன் மூலம் இவருக்கு கிடைத்த பிரபலம், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் வாய்ப்பை பெற்று தந்தது.
கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்ட, லாஸ்லியா மிகவும் சாமர்த்தியமாக விளையாடி ஃபைனல் வரை வந்து இரண்டாவது ரன்னர்அப்பாக மாறினார்.
இந்த வெற்றி உனக்கு சமர்ப்பணம் செல்லமே.... பிக்பாஸ் வெற்றியை மகனுடன் சேர்ந்து ஜாலியாக கொண்டாடிய அசீம்
இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது நடிகர் கவினை காதலிப்பது போல் நடந்து கொண்ட நிலையில், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் அவர் யார் என்றே தெரியாதது போல் நடந்து கொண்டது, பரபரப்பாக பேசப்பட்டது.
தற்போது கவின் மற்றும் லாஸ்லியா இருவருமே, தங்களுடைய படத்தின் பணிகளில் கவனம் செலுத்தி வரும் நிலையில், லாஸ்லியா படவாய்ப்பை பிடிக்க வேண்டும் என்பதற்காக விதவிதமான கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து வருகிறார்.
புசு புசு அழகில் ஜொலித்த லாஸ்லியா, தற்போது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு உடல் எடையை குறைத்துள்ளார். தற்போது வெக்கேஷனை கொண்டாடுவதற்காக வெளிநாட்டுக்கு சென்றுள்ள லாஸ்லியா அங்கிருந்தபடி விதவிதமான கவர்ச்சியில் வெளியிடும் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
மேலும் பட வாய்ப்புக்காக இப்படி எலும்பும் தோலுமாக மாறி உள்ளதால், லாஸ்லியாவின் அழகு மொத்தமும் போய் விட்டதாகவும், பார்ப்பதற்கு சிக்கன் குனியா கொசு போன்று இருப்பதாக கமெண்டில் தெறிக்கவிட்டு வருகிறார்கள்.
நடிகரும், இயக்குனருமான ஈ ராமதாஸ் மாரடைப்பால் மரணம் - திரையுலகினர் அதிர்ச்சி
பிரண்ட்ஷிப் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான லாஸ்ட்லியா, அடுத்ததாக நடித்த 'கூகுள் குட்டப்பன்' திரைப்படம் சுமாரான வெற்றியை பெற்ற நிலையில், அடுத்தடுத்து சில படங்களில் நடிக்க கமிட் ஆகி உள்ளார்.
மேலும் ஹீரோயின் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்வதற்காக அளவு கடந்த கவர்ச்சியில் லாஸ்லியா சில நாட்களாக வெளியிட்டு வரும் புகைப்படங்கள் வைரல் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.