MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • பொழுதுபோக்கு
  • Bigg Boss
  • இந்த வெற்றி உனக்கு சமர்ப்பணம் செல்லமே.... பிக்பாஸ் வெற்றியை மகனுடன் சேர்ந்து ஜாலியாக கொண்டாடிய அசீம்

இந்த வெற்றி உனக்கு சமர்ப்பணம் செல்லமே.... பிக்பாஸ் வெற்றியை மகனுடன் சேர்ந்து ஜாலியாக கொண்டாடிய அசீம்

பிக்பாஸ் சீசன் 6-ல் வெற்றிபெற்ற பின் தன் மகன் ரயானை சந்தித்து அவனுடன் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்துள்ளார் அசீம்.

1 Min read
Author : Ganesh A
Published : Jan 24 2023, 09:25 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

சின்னத்திரை சீரியல்களில் நாயகனாக நடித்து பிரபலமானவர் அசீம். இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். 21 போட்டியாளர்களில் ஒருவராக கடந்த அக்டோபர் மாதம் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த அசீம், 106 நாட்கள் பல்வேறு சண்டை, சர்ச்சைகள் என அனைத்தையும் எதிர்கொண்டு வெற்றி கண்டார்.

24

அசீமின் வெற்றி அவருக்கு மகிழ்ச்சியை தந்தாலும், பிக்பாஸ் ரசிகர்களுக்கு இது மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. பிக்பாஸ் 6 ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து பிற போட்டியாளர்களை தரக்குறைவாக பேசி, அவர்களிடம் சண்டையிட்டு வந்த ஒருவருக்கு எப்படி டைட்டிலை கொடுத்தார்கள் என்பது தான் பலரது கேள்வியாக உள்ளது.

இதையும் படியுங்கள்... சிம்பு வீட்டுக்கு வந்த புது வாரிசு... மீண்டும் தாத்தா ஆன குஷியில் டி.ராஜேந்தர்

34

சிலரோ இனி பிக்பாஸே பார்க்க போவதில்லை என்கிற முடிவுக்கு வந்துவிட்டதாக பதிவிட்டு வருகின்றனர். அசீமின் வெற்றிக்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், அவர் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் வெற்றியை கொண்டாடி வருகிறார். குறிப்பாக தனது மகனுக்காக தான் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாக ஆரம்பத்தில் தெரிவித்திருந்த அசீம், வெற்றிபெற்ற பின் தன் மகன் ரயானை சந்தித்து அவனுடன் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.

44

மகனின் கையில் பிக்பாஸ் கோப்பையையும், ரூ.50 லட்சத்துக்கான காசோலையையும் கொடுத்து மகிழ்ந்த அசீம், அப்போது எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, “எனது உயரம் உனது இலக்கல்ல... நீ உயரனும் என்பதே என் இலக்கு..! இந்த வெற்றி உனக்கு சமர்ப்பணம் என் செல்லமே” என உருக்கமாக பதிவிட்டுள்ளார் அசீம். அவரின் இந்த பதிவுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளன.

இதையும் படியுங்கள்... 22 ஆண்டுகளுக்கு முன்பே அஜித்துக்கு ஜோடியாக நடிக்க வந்த சூப்பர் வாய்ப்பை நழுவவிட்டேன் - துணிவு நடிகை வருத்தம்

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
பிக் பாஸ் டைட்டிலை தட்டிதூக்கிய திவ்யா கணேஷ்... டிராபியோடு அவர் அள்ளிச் சென்ற பரிசுகள் என்னென்ன?
Recommended image2
பிக் பாஸ் பைனலிஸ்டுகளுக்கு வாரி வழங்கப்பட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா? இதிலும் திவ்யா தான் டாப்பு..!
Recommended image3
பிக் பாஸ் பைனல்ஸில் பார்வதி - கம்ருதீன்... ஷாக் ஆன சாண்ட்ரா; இன்ப அதிர்ச்சியில் விஜய் சேதுபதி..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved