22 ஆண்டுகளுக்கு முன்பே அஜித்துக்கு ஜோடியாக நடிக்க வந்த சூப்பர் வாய்ப்பை நழுவவிட்டேன் - துணிவு நடிகை வருத்தம்
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படத்தில் கண்மணி என்கிற கதாபாத்திரத்தில் ஆக்ஷன் ஹீரோயினாக நடித்து மிரட்டி இருந்தார் மஞ்சு வாரியர்.
மலையாள திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வந்துகொண்டிருப்பவர் மஞ்சு வாரியர். மலையாளத்தில் இவர் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆன படங்கள் ஏராளமானவை தமிழில் ரீமேக் ஆகி இருக்கின்றன. ஜோதிகா நடித்த 36 வயதினிலே, நயன்தாரா நடிப்பில் வெளியான பாஸ்கர் தி ராஸ்கல் போன்ற படங்களெல்லாம் மஞ்சு வாரியர் நடித்த படங்களின் ரீமேக் ஆகும்.
மலையாளத்தில் செம்ம பிஸியான நடிகையாக வலம் வரும் மஞ்சு வாரியர், தமிழில் கதாநாயகியாக நடித்த முதல் திரைப்படம் அசுரன். அதில் பச்சையம்மாள் என்கிற கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் தனுஷுக்கு ஜோடியாக எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி முதல் படத்திலேயே மக்கள் மனதில் இடம்பிடித்தார் மஞ்சு வாரியர்.
இதையும் படியுங்கள்... 'தளபதி 67' படத்தில் இணைந்த சீயான் விக்ரம்..! கால்ஷீட் மட்டும் இத்தனை நாட்களா?
இதையடுத்து சமீபத்தில் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படத்தில் கண்மணி என்கிற கதாபாத்திரத்தில் ஆக்ஷன் ஹீரோயினாக நடித்து மிரட்டி இருந்தார் மஞ்சு வாரியர். இப்படத்தில் அவர் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கவில்லை. இந்நிலையில், 22 ஆண்டுகளுக்கு முன் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்பை நழுவவிட்டதாக நடிகை மஞ்சு வாரியர் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறி உள்ளார்.
அதன்படி அஜித் நடிப்பில் கடந்த 2000-ம் ஆண்டு வெளிவந்து வெற்றிபெற்ற கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க மஞ்சு வாரியரை தான் முதலில் அழைத்தாராம் அப்படத்தின் இயக்குனர் ராஜீவ் மேனன். ஆனால் அந்த சமயத்தில் வேறு படங்களில் பிசியாக இருந்ததால் அதில் அவரால் நடிக்க முடியாமல் போனது. இதையடுத்து தான் அந்த ரோலில் ஐஸ்வர்யா ராய்யை அந்த ரோலில் நடிக்க வைத்துள்ளனர். இதை அறிந்த ரசிகர்கள் நல்ல சான்ஸை மிஸ் பண்ணீட்டீங்களே என கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... எங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்..! கணவர் அட்லீயுடன் உள்ள புகைப்படங்களை பகிர்ந்த பிரியா..!