தளபதி 67 படத்தில், சீயான் விக்ரம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் அடுத்ததாக நடிக்க உள்ள 67 ஆவது படம் குறித்து, அவ்வப்போது சில முக்கிய அப்டேட் வெளியாகி வரும் நிலையில், இந்த படத்தில்... மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரம் நடிக்க உள்ளதாகவும் இதற்கான பேப்பர்ஸ் கையெழுத்தாகி விட்டதால், விக்ரம் நடிப்பது உறுதி என கூறப்படுகிறது.
விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம், ரிலீஸ் ஆகி விட்டதால்... தளபதியின் 67 ஆவது படம் குறித்த தகவல்கள் தான் சமூக வலைதளத்தில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. விஜய் கேங் ஸ்டாராக நடிக்கும் இந்த படத்தில், மிஷ்கின், கெளதம் மேமன், மன்சூர் ஆலிகான், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், யோகி பாபு, பிக்பாஸ் ஜனனி ஆகியோர் நடிக்க உள்ளதாக கூறப்பட்டு வந்தாலும், இதுவரை இப்படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் பற்றிய உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.
எங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்..! கணவர் அட்லீயுடன் உள்ள புகைப்படங்களை பகிர்ந்த பிரியா..!

மேலும் நடிகர் கமல்ஹாசனும் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. அந்த வகையில் சற்று முன் வெளியாகியுள்ள தகவலில், நடிகர் விக்ரம் இப்படத்தில் நடிக்க உள்ளது கையெழுத்தாகி விட்டதாகவும், 'தளபதி 67' படத்தில் நடிப்பதற்காக விக்ரம் மொத்தம் 30 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதால், மிக முக்கிய கதாபாத்திரத்தில் தான் விக்ரம் நடிக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது.

பல பெரிய நடிகர்கள் இப்படத்தில் தொடர்ந்து இணைந்து வருவதால், செம்ம மாஸான படத்திற்கு லோகேஷ் கனகராஜ் தயாராகி விட்டார் என ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நீண்ட இடைவெளிக்கு பின்னர் திரிஷா நடிக்க உள்ளார் என்பது குறிபிடித்தக்கது.
