MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • விஜய்க்கு அசிங்கத்தை ஏற்படுத்துவதே அவரது தற்குறி ரசிகர்கள் தான்.! போட்டு தாக்கும் ஜி.பி.முத்து

விஜய்க்கு அசிங்கத்தை ஏற்படுத்துவதே அவரது தற்குறி ரசிகர்கள் தான்.! போட்டு தாக்கும் ஜி.பி.முத்து

G.P.Muthu criticized Vijay fans : விஜய் கூட்ட நெரிசல் இழப்பீடு பெற்றவர்கள் பேசிய கருத்திற்கு விமர்சித்து நியாயத்தைதான் பேசினேன் என தெரிவித்த ஜி.பி.முத்து, ரசிகர்கள்தான் விஜய்க்கு அசிங்கத்தை ஏற்படுத்துகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார். 

2 Min read
Author : Ajmal Khan
Published : Oct 24 2025, 09:02 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : tvk

தமிழக அரசியல் களத்தில் இறங்கியுள்ள நடிகர் விஜய், தவெக என்ற அரசியல் கட்சியை தொடங்கி விக்கிரவாண்டி மற்றும் மதுரையில் மிக பிரம்மாண்ட மாநாட்டை நடத்திய அசத்தியுள்ளார். அடுத்ததாக மக்களை சந்திக்க களம் இறங்கிய விஜய், ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை ஒவ்வொரு மாவட்ட மக்களை சந்தித்து பேசி வந்தார். 

திருச்சி, அரியலூர், திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் தனது பிரச்சாரத்தை முடித்த விஜய், அடுத்தாக நாமக்கல் மற்றும் கரூரில் பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

25
Image Credit : Google

உயிரிழந்த குடும்பங்களுக்கு தமிழக அரசு சார்பாக 10 லட்சம் ரூபாய் இழப்பீடும், தவெக சார்பில் 20 லட்சம் ரூபாய் இழப்பீடும் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து தவெக சார்பில் பாதிக்கப்பட்டவர்களின் வங்கி கணக்கில் 20 லட்சம் ரூபாய் வரவு வைக்கப்பட்டது. 

அப்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் தொலைக்காட்சிகளுக்கு கொடுத்த பேட்டியில் எனது மகன் விஜய்யை பார்க்க போய் இறந்துள்ளார். போனால் போகட்டும், விஜய்யை பார்த்தே போதும் என இது போன்ற கருத்துகளை தெரிவித்து இருந்தனர். இந்த பேச்சு கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது.

Related Articles

Related image1
கோவில் சொத்துகள் இனி கோவிலுக்கே.. திமுக அரசுக்கு அபாய மணி அடித்த நீதிமன்றம் - சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் பாஜக
Related image2
ஒரு மேயரை தேர்வு செய்ய துப்பில்ல.. பேசாம கலைச்சிட்டு போயிடுங்க.. திமுக அரசை பொளந்து கட்டிய செல்லூர் ராஜூ
35
Image Credit : Asianet News

இது தொடர்பாக நடிகர் ஜி.பி. முத்து வெளியிட்ட வீடியோ பதிவில், உயிரழந்தவர்களின் குடும்பத்தினர் பணத்தை பெற்றுக்கொண்டு பேசியது ரொம்ப கேவலமாக இருக்கு. அதனை பேட்டியாக சொல்லும் விதம் மோசமாக உள்ளது. பிள்ளை உயிரை விட 20 லட்சம் மிக பெரியதாக தெரிகிறதா என கேள்வி எழுப்பியிருந்தார். மேலும் 2 பிள்ளைகளை உயிர் போய்விட்டது. அதற்கு அவர்கள் வருந்தி பேசவில்லை.

 ரொம்ப வெட்கமாக இருக்கு, பெத்த பிள்ளைக்கு இழந்த பிறகு எத்தனை லட்சம், எத்தனை கோடி வந்தால் பெரியது கிடையாது. விஜய் சாருக்காக எனது பச்சை பிள்ளை உயிரை கொடுத்து இருக்கு, இருந்தாலும் விஜய் சாரை கிட்ட போய் பார்த்தோம் என்று கூறுகிறார்கள் எவ்வளவு கேவலமாக இருக்கு, வெட்கமா இல்லையா என கேள்வி எழுப்பி வீடியோ வெளியிட்டிருந்தார்.

45
Image Credit : instagram

இதனையடுத்து விஜய் ரசிகர்கள் ஜி.பி.முத்துவை சமூகவலைதளத்தில் விளாசியெடுத்துள்ளனர்.. மிகவும் மோசமான வார்த்தைகளையும் பதிவு செய்துள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஜி.பி.முத்து வெளியிட்டுள்ள மற்றொரு வீடியோவில், விஜய் ரசிகர் விமரசித்து வீடியோ வெளியிட்டுள்ளார். 

நீங்கள் விஜய் ரசிகரா இருங்க..யாராவது இருங்கள். நானும் விஜய் படம் பார்த்துள்ளேன். பூவே உனக்காக படம் பல முறை பார்த்துள்ளேன். சிந்தித்து பார்த்து பேசுங்கள். பணத்தை பெற்றுக்கொண்டு பேட்டி கொடுக்கிறார்கள். இந்த மாதிரி பேட்டி கொடுத்தால் யாருக்கு அசிங்கம் என பாருங்கள். இப்படி பேசி, பேசி தான் விஜய்க்கு அசிங்கத்தை ஏற்படுத்துகிறீர்கள். உயிருக்கு முக்கியத்தவம் கொடுங்கள் என்று தான் தெரிவித்தேன்.

55
Image Credit : X

பணத்திற்காக உயிரை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாதீங்க என்று தான் வீடியோ வெளியிட்டேன். காஷ்மீரில் 27 பேர் கொல்லப்பட்டனர். அப்போது இரு நாட்டிற்கு இடையே போர் ஏற்பட்டது. எனவே 41 உயிர் என்பது சாதாரணது இல்லை. நீங்கள் யாருடைய ரசிகராக இருங்கள் கவலை இல்லை, நியாயத்தை யார் வேண்டும் என்றாலும் பேசுவார்கள். 

நீங்க இப்படி பேசி பேசி தான் தற்குறி என்ற பெயரை எடுத்துள்ளீர்கள். நாங்க தற்குறி இல்லை. விஜய்யை அசிங்கப்படுத்துவதே விஜய் ரசிகர்கள் தான். நாங்கள் எல்லாம் அசிங்கப்படுத்தவில்லை என ஜி.பி.முத்து ஆவேசமாக பேசியுள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
tvk நெரிசல்
டிவி.கே. விஜய்
அரசியல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஏப்ரல் 10 ரிலீஸ் இல்லை... கருப்பு படம் பற்றி புது குண்டை தூக்கிப்போட்ட ஆர்.ஜே.பாலாஜி
Recommended image2
லஞ்சம் வாங்கிய செந்தில்... மயிலுக்காக மாஸ்டர் பிளான் போடும் மீனா - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அப்டேட்
Recommended image3
பிளாப் ஆன மனோஜின் லவ் டிராமா... ரோகிணியின் சாட்டையடியால் கதறிய சந்தோஷ் - சிறகடிக்க ஆசை சீரியல்
Related Stories
Recommended image1
கோவில் சொத்துகள் இனி கோவிலுக்கே.. திமுக அரசுக்கு அபாய மணி அடித்த நீதிமன்றம் - சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் பாஜக
Recommended image2
ஒரு மேயரை தேர்வு செய்ய துப்பில்ல.. பேசாம கலைச்சிட்டு போயிடுங்க.. திமுக அரசை பொளந்து கட்டிய செல்லூர் ராஜூ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved