எனக்கு 60.. உனக்கு 50..! ஆட்டம் பாட்டத்தோடு நடந்த ஆஷிஷ் வித்யார்த்தி - ரூபாலி திருமணம்! வெட்டிங் போட்டோஸ்!
தமிழ் சினிமாவில் பல படங்களில் முரட்டு வில்லனாக நடித்த, ஆஷிஷ் வித்யார்த்தி மற்றும் ரூபாலி பருவா ஆகியோருக்கு நேற்று திருமணம் நடந்த நிலையில், இவர்களின் வெட்டிங் போட்டோஸ் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
1990-களில் இருந்து ஹிந்தி திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராகவும் வில்லனாகவும் நடித்து மிகவும் பிரபலமானவர் ஆஷிஷ் வித்யார்த்தி.
ஹிந்தியை தொடர்ந்து, தெலுங்கு, பெங்காலி போன்ற மொழிகளிலும் நடிக்க துவங்கிய இவர், தமிழில் 2001-ம் ஆண்டு, தரணி இயக்கத்தில் வெளியான தில் திரைப்படத்தின் மூலம் முரட்டு போலீசாக அறிமுகமானார்.
கேன்ஸ் விழாவில்... ஹீரோ - ஹீரோயினரை மிஞ்சிய அட்லீ - பிரியா ஜோடி! ரெட் கார்பெட் போட்டோஸ்!
தமிழில் இவர் நடித்த முதல் படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதோடு, ஆஷிஷ் வித்யார்த்தியின் நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதை தொடர்ந்து, விஜய், ரஜினி, அர்ஜுன், பிரசாந்த் போன்ற நடிகர்களுக்கு வில்லனாக நடிக்க துவங்கினார்.
வில்லனாக மட்டும் இன்றி, ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடத்திலும் நடித்தார். குறிப்பாக கில்லி படத்தில், விஜய்யின் தந்தையாகவும், மலைக்கோட்டை படத்தில் விஷாலுக்கு சித்தப்பா வேடத்திலும் நடித்திருந்தார்.
'லவ் டுடே' ஹிந்தி ரீமேக்..! ஹீரோவாகும் சூப்பர்ஸ்டாரின் வாரிசு! ஹீரோயின் யார் தெரியுமா?
ஆனால் கடந்த சில வருடங்களாக இவை ஹிந்தி திரைப்படங்களில் மட்டுமே அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் இவரின் திருமணம் குறித்த தகவல் தான் சமூக வலைத்தளத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி நேற்று தன்னுடைய காதலியை இரண்டாவது திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர் ஏற்கனவே ராஜோஷி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், சமீபத்தில் தான் இவர்களுக்கு விவாகரத்து ஆனதாக கூறப்படுகிறது.
கடற்கரை மணலில் படுத்துக்கொண்டு கன்னாபின்னானு கவர்ச்சி போஸ் கொடுத்த ஷிவானி - வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்
ஆஷிஷ் வித்யார்தி - ராஜோஷி தம்பதிக்கு அர்ஷ் என்கிற 23 வயது மகன் உள்ள நிலையில், தன்னுடைய 60-ஆவது வயதில் இரண்டாம் திருமணம் செய்து கொண்டு ஷாக் கொடுத்துள்ளார்.
இவர் திருமணம் செய்து கொண்டுள்ள ரூபாலி பருவாவுக்கு 50 வயது ஆகிறது. இவர் கௌகாத்தியில் பேஷன் ஸ்டோர் ஒன்றையும் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
'பிச்சைக்காரன் 2' எதிரொலி? திருப்பதியில் உள்ள பிச்சைக்காரர்களுக்கு ஓடி சென்று உதவிய விஜய் ஆண்டனி!
தற்போது இவர்களின் திருமண புகைப்படங்கள் சமூக வளைத்ததில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. ரூபாலி தன்னுடைய திருமணத்தில், நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும், இவர்களது திருமணத்தில் பிரபலங்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.