'லவ் டுடே' ஹிந்தி ரீமேக்..! ஹீரோவாகும் சூப்பர்ஸ்டாரின் வாரிசு! ஹீரோயின் யார் தெரியுமா?
இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், வெளியாகி 150 கோடி வசூல் செய்த 'லவ் டுடே' படத்தின் ஹிந்தி ரீமேக் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
தென்னிந்திய சினிமாவில்... சமீப காலமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, போன்ற மொழிகளில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற படங்கள், மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருவது வழக்கமாகி வருகிறது.
அந்த வகையில் கடந்த ஆண்டு AGS என்டர்டெயின்மென்ட் சார்பில், கோமாளி பட இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் நடித்து, இயக்கிய திரைப்படம் 'லவ் டுடே'. இந்த திரைப்படம் ஐந்து கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில், சுமார் 150 கோடி வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தை தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் ஹிந்தி ரீமேக்கில், பிரதீப் ரங்கநாதன் மற்றும் இவானா நடித்த கதாபாத்திரத்தில் பாலிவுட் திரை உலகின் டாப் பிரபலங்களான இருவரின் வாரிசுகள் தான் இந்த திரைப்படத்தின் ஹீரோ - ஹீரோயினாக அறிமுகமாக உள்ளதாக கூறப்படுகிறது.
அந்த வகையில், பிரதீப் ரங்கநாதன் நடித்த கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் அமீர்கானின் மகன் ஜுனைத் கான் நடிக்க இருப்பதாகவும், இவானா கதாபாத்திரத்தில் நடிகை ஸ்ரீதேவியின் இரண்டாவது மகளான குஷி கபூர் நடிகையாக அறிமுகமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
60 வயதில் 2-ஆவது திருமணம் செய்து கொண்ட தளபதி விஜய்யின் ரீல் தந்தை ஆஷிஷ் வித்யார்த்தி!
அதேபோல் இந்தப் படத்தை, 'சீக்ரெட் சூப்பர் ஸ்டார்', 'லால்சிங சத்தா' ஆகிய படங்களை இயக்கிய அத்வைத் சந்தன் இயக்க இருப்பதாகவும், இது குறித்த அதிகார பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என கூறப்படுகிறது. தமிழில் 5 கோடி ரூபாயில் எடுக்கப்பட்டு பல கோடி லாபம் பார்த்த இப்படம் ஹிந்தியிலும் இதே சாதனையை நிகழ்த்துமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.