சர்ச்சைக்கு மத்தியில் 200 கோடி வசூலித்த... 'தி கேரளா ஸ்டோரி' படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!
பல்வேறு சர்ச்சைகளை கடந்து, தற்போது வரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும், 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றிய நிறுவனம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் சர்ச்சையான கதைக்களத்திற்காக பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டது. அதாவது கேரளாவை சேர்ந்த, பல்லாயிரக்கணக்கான இளம் பெண்களை கட்டாயப்படுத்தி, மதம் மாற்றம் செய்து, வெளிநாட்டுக்கு அழைத்து சென்று பயங்கரவாத அமைப்புகளால் தீவிரவாத பணிகளுக்கு பயன்படுத்த பட்டனர் என தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே, இப்படத்திற்கு எதிராக எதிர்ப்புகள் எழுந்தன. மேற்கு வங்கத்தில் இப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டது மட்டும் இன்றி, தமிழகத்திலும் மூன்றே நாட்களில் இப்படம் திரையரங்குகளில் இருந்து வாஷ் அவுட் ஆனது.
இப்படம் படம் வெளியான முதல் நாளிலிருந்தே, ஒரு பக்கம் சர்ச்சைகளை சந்தித்து வந்தாலும், மற்றொருபுறம், பாக்ஸ் ஆபிஸில் வசூலில் வேட்டையாடி வந்தது. மேலும் இப்படம் இஸ்லாமியர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட திரைப்படம் என்கிற விமர்சனம் எழுந்த நிலையில், இப்படத்தை பார்தத ரசிகர்களும், பிரபலங்களும் இது இஸ்லாமியர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட படம் இல்லை, தீவிர வாதத்துக்கு எதிராகவே எடுக்கப்பட்ட படம் என்பதை தெளிவு படுத்தினர். மேலும் இப்படத்திற்கு மேற்கு வங்கத்தில் தடை விதிக்கப்பட்ட நிலையில், இதற்க்கு எதிராக 'தி கேரளா ஸ்டோரி' படத்தின் தயாரிப்பாளர் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடையையும் நீக்க செய்தது குறிப்பிடத்தக்கது. அதே போல் மீண்டும் தமிழகத்தில் உரிய பாதுகாப்புடன் இப்படத்தை ரீ ரிலீஸ் செய்யவும் நீதி மன்றம் உத்தரவிட்டது.
'பிச்சைக்காரன் 2' எதிரொலி? திருப்பதியில் உள்ள பிச்சைக்காரர்களுக்கு ஓடி சென்று உதவிய விஜய் ஆண்டனி!
இந்நிலையில் தற்போது கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியாகி 3 வாரங்களை கடந்துள்ள நிலையில், இப்படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் 200 கோடி கிளப்பில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை வர்த்தக ஆய்வாளர் தரண் ஆதர்ஷ் ட்வீட் மூலம் உறுதி செய்துள்ளார். இந்த தகவல் படக்குழுவினரை உச்சகட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதைத்தொடர்ந்து, இப்படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றியுள்ள நிறுவனம் குறித்த தகவல் தற்போது அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும், விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தீபாவளி ரேஸில் இணைந்த ஜப்பான்! கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான வேற லெவல் இன்ட்ரோ டீசர்!