'பிச்சைக்காரன் 2' எதிரொலி? திருப்பதியில் உள்ள பிச்சைக்காரர்களுக்கு ஓடி சென்று உதவிய விஜய் ஆண்டனி!
நடிகரும் - இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனிதிருப்பத்தில் உள்ள பிச்சைக்காரர்களுக்கு, அத்யாவசிய பொருட்களை கொடுத்து உதவியுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
கடந்த 2016 ஆம் ஆண்டு இயக்குனர் சசி இயக்கத்தில், வெளியான திரைப்படம் 'பிச்சைக்காரன் 2'. இந்த திரைப்படம் நடிகர் விஜய் ஆண்டனியின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. மேலும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான அனைத்து படங்களுமே கலவையான விமர்சனங்களை மட்டுமே பெற்ற நிலையில், 6 வருடங்கள் கழித்து மீண்டும் பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தை தானே இயக்கி நடிக்க உள்ளதாக விஜய் ஆண்டனி அறிவித்தார்.
முதலில் 'பிச்சைக்காரன் 2' படத்தை சசி தான் இயக்குவதாக இருந்தது. ஆனால் வேறு ஒரு படத்தில் பிஸியானதால் இந்த படத்தில் இருந்து விலகினார். வேறு சில இயக்குனர்களை இயக்க வைக்க, ஆலோசனை நடத்திய போது, எதுவும் சரிப்பட்டு வராததால், கடைசியில் விஜய் ஆண்டனியே இயக்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்தார். அதே போல் இந்த படத்திற்கு இசை மற்றும் படத்தொகுப்பு பணிகளையும் விஜய் ஆண்டனி மேற்கொண்டார்.
'பிச்சைக்காரன் 2' திரைப்படம், கடந்த வாரம் வெளியான நிலையில்... கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. ஆனால் தமிழை விட தெலுங்கில், இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாக தகவல்கள் வெளியாக்கின.
தீபாவளி ரேஸில் இணைந்த ஜப்பான்! கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான வேற லெவல் இன்ட்ரோ டீசர்!
இந்நிலையில் திடீரென விஜய் ஆண்டனி திருப்பதிக்கு விசிட் அடித்த நிலையில், அங்கிருக்கும் பிச்சைக்காரர்களுக்கு செருப்பு, போர்வை மற்றும் கைவிசிறிகளை வழங்கி உள்ளார். இது குறித்த புகைப்படங்களும் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும், 'பிச்சைக்காரன் 2' படத்தின் எதிரொளியா என கேள்வி எழுப்பி வருகிறார்கள். விஜய் ஆண்டனி திருப்பதிக்கு வந்த தகவல் அறிந்து பல ரசிகர்கள் அவருடன் செல்பி எடுக்க போட்டி போட்ட நிலையில், அனைவருடனும் புகைப்படம் எடுத்து கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்.