அதிர்ச்சி! வாணி ராணி... பாண்டவர் இல்லம் சீரியல்களின் இயக்குனர் ஓ.என்.ரத்னத்தின் மனைவி திடீர் தற்கொலை!
பிரபல சீரியல் இயக்குனரின் மனைவி, திடீரென தற்கொலை செய்து கொண்டு இறந்த சம்பவம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியிலும், பிரபலங்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சன் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் சீரியல்களான... 'அழகு', 'வாணி ராணி' போன்ற சீரியல்களில் நடிகை ரேவதி மற்றும் ராதிகா போன்ற முன்னணி நடிகைகளை வைத்து இயக்கியவர், இயக்குனர் ஓ.என்.ரத்தினம். தற்போது சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் செவ்வந்தி, பிரியமான தோழி, பாண்டவர் இல்லம், போன்ற ஹிட் சீரியல்களை இயக்கி வருகிறார்.
இந்நிலையில் இவருடைய மனைவியை பிரியா என்பவர் இன்று காலை திடீரென தற்கொலை செய்து கொண்டு, இறந்துள்ள சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இயக்குனர் ஓ என் ரத்னம், பொள்ளாச்சியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர். இவரது மனைவியும் அதே ஊரை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. மேலும் இருவரும் பல ஆண்டுகள் காதலித்து குடும்பத்தினரின் எதிர்ப்புகளைக் கடந்த, திருமண வாழ்க்கையில் ஒன்றிணைந்துள்ளனர். இவர்களுக்கு தற்போது இரண்டு பிள்ளைகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
5 ஆவது முறையாக அஜித்துடன் ஜோடி சேரும் த்ரிஷா! இந்த முறையாவது ரசிகர்கள் ஆசை நிறைவேறுமா?
பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால், கடந்த இரண்டு வாரமாக ஓ.என்.ரத்தினம் - பிரியா தம்பதியின் பிள்ளைகள், அவர்களின் சொந்த ஊரான பொள்ளாச்சியில் இருக்கும் தாத்தாவின் வீட்டிற்கு சென்றுள்ளனர். இரண்டு வாரம் கழித்து இன்று காலை தான் பிள்ளைகள் இருவரும் வீட்டிற்கு வந்த நிலையில், அவர்களை அழைப்பதற்காக இயக்குனர் ரத்தினம் பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார். மேலும் ரத்னம் மற்றும் பிரியா தம்பதி இடையே ஒரு சிறு கருத்து வேறுபாடு காரணமாக, அடிக்கடி பிரச்சனை வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக மனமுடைந்து காணப்பட்ட பிரியா, இன்று காலை தன்னுடைய கணவர், பிள்ளைகளை அழைத்து செல் அழைத்து வர பேருந்து நிலையம் சென்ற நேரத்தில்... வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டிற்கு பிள்ளைகளை அழைத்து வந்து பிறகே... ஓ.என்.ரத்தினத்திற்கு இது குறித்து தெரிய வர, பின்னர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதும் பிரியா உயிரிழந்தார்.
மேலும் தற்போது இவருடைய உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், பிரேத பரிசோதனைக்கு பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு எதிர்ப்புகளை தாண்டி வீட்டில் அடம் பிடித்து பிரியா இயக்குனர் ரத்னத்தை திருமணம் செய்து கொண்ட நிலையில், சிறு பிரச்சனைக்காக உயிரையே மாய்த்து கொண்டுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.