5 ஆவது முறையாக அஜித்துடன் ஜோடி சேரும் த்ரிஷா! இந்த முறையாவது ரசிகர்கள் ஆசை நிறைவேறுமா?
விஜயின் 'லியோ' படத்தை தொடர்ந்து, அஜித்தின் விடாமுயற்சி படத்திலும் நடிகை த்ரிஷாவை ஹீரோயின் ஆக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக ஒரு தகவல் தீயாக பரவி வருகிறது.
நடிகை நயன்தாராவுக்கு அடுத்தபடியாக, தமிழ் சினிமாவில் சுமார் 20 வருடங்களுக்கு மேல் ஹீரோயினாக மட்டுமே நடித்து ரசிகர்கள் மனதை வசீகரித்து வருபவர் த்ரிஷா. சமீப காலமாக ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களையே அதிகம் தேர்வு செய்து, நடிகை திரிஷா நடித்து வந்தார். அப்படி இவர் நடித்த நாயகி, மோகினி, ராங்கி, பரமபதம் போன்ற படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறவில்லை.
இதனால் தமிழில் இவருக்கான மார்க்கெட் சரிந்த நிலையில், மீண்டும் விட்ட இடத்தை பிடிக்க மிகவும் பொறுமையாக தன்னுடைய படங்களை தேர்வு செய்து நடிக்க துவங்கினார். ஒரு சில முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் படங்களில் மட்டுமே கமிட் ஆனார். அந்த வகையில் இவர் நடித்த 96 மற்றும் பேட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.
இதை தொடர்ந்து, இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், இரண்டு பாகங்களாக உருவான 'பொன்னியின் செல்வன்' படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் த்ரிஷா நடித்தார். இந்த படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான நிலையில், நடிகை த்ரிஷாவின் கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. மேலும் விட்ட இடத்தையும் நடிகை திரிஷா மீண்டும் எட்டி பிடித்தார்.
அதேபோல் இரண்டாவது பாகத்திலும் த்ரிஷாவின் கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்தடுத்து தன்னுடைய திரைப்படங்களை தேர்வு செய்து நடிப்பதில் முழு கவனம் செலுத்தி வந்தார். அந்த வகையில் நீண்ட இடைவேளைக்கு பின்னர், தளபதி விஜய்க்கு ஜோடியாக 'லியோ' படத்தில் திரிஷா இணைந்து நடித்து வருகிறார்.
முதுகை முழுசா காட்டி வெகேஷனை வேற லெவலுக்கு என்ஜாய் பண்ணும் வாணி போஜன்!
ஏற்கனவே த்ரிஷா மற்றும் விஜய் இணைந்து நடித்த, கில்லி திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற நிலையில் மீண்டும், இந்த ஜோடி இணைந்து நடித்து வருவதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. லியோ திரைப்படம் இறுதி கட்டத்தை தற்போது எட்டியுள்ள நிலையில், இன்னும் ஒரு சில வாரங்களில் தன்னுடைய படபிடிப்பை த்ரிஷா முடித்து விடுவார் என கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து தற்போது த்ரிஷாவை 'விடாமுயற்சி' படத்திலும், அஜித்துக்கு ஜோடியாக நடிக்க வைக்க படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மகிழ் திருமேனி அஜித்தை வைத்து இயக்க உள்ள விடாமுயற்சி படத்தில், நடிகை ஐஸ்வர்யா ராய் ஹீரோயினாக நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது பட குழுவினர் த்ரிஷாவிடம் இப்படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம். விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே த்ரிஷா மற்றும் அஜித் இணைந்து ஜி, கிரீடம், மங்காத்தா, என்னை அறிந்தால், என நான்கு படங்களில் நடித்துள்ளனர். ஆனால் இந்த நான்கு படங்களிலுமே, அஜித் - திரிஷா கிளைமாக்ஸில் பிரிந்து விடுவார்கள். ஒரு வேலை விடாமுயற்சி படத்தில் 5 ஆவது முறையாக அஜித் - த்ரிஷா இணைந்து நடித்தால், ஒன்று சேர்வார்களா? என நெட்டிசன்கள் தங்களுடைய ஆசையையும், எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது