எங்கள் கும்பலில் உள்ள ஒருவரின் தங்கையையும், சபரிராஜன் காதலித்து உல்லாசம் அனுபவித்து வீடியோ எடுத்து வைத்திருந்தார் என சபரிராஜனின் லீலைகளால் சிக்கியதாக கூறியுள்ளான் செக்ஸ் மாஃபியா கும்பல்  தலைவன் திருநாவுக்கரசு. 

பொள்ளாச்சி பாலியல் புகார் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசை 4 நாட்கள் போலீஸ் காவலில் விசாரணை மேற்கொள்ள சிபிசிஐடி போலீசாருக்கு அனுமதி வழங்கியுள்ளது கோவை மாவட்ட முதன்மைக் குற்றவியல் நீதிமன்றம்.

இதனை தொடர்ந்து ரகசிய இடத்தில் வைத்து நடத்தப்பட்ட விசாரணையில் பல தகவல்கள் கிடைத்துள்ளது. 200 க்கும் மேற்பட்ட பெண்களை சீரழித்த இந்த கும்பல் கடைசியாக தனது மொத்த கேங்கோடு சிக்கியது எப்படி என கூறியிருக்கிறார்.

எம்ஜிஆர் நகரை சேர்ந்த சபரிராஜன், எங்களைப்போலவே பெண்களை காதல் வலையில் வீழ்த்தி உல்லாசம் அனுபவித்து வந்தது தெரிந்ததால், அவனை அடித்து உதைத்து பணியவைத்து எங்களுக்கு நண்பனாக்கினோம், அவன் உல்லாசம் அனுபவித்து வீடியோ எடுத்து போனில் வைத்திருந்தததை பார்த்த நாங்கள், அந்த ஆபாச வீடியோவில் உள்ள பல காதலிகளை ஒவ்வொருவராக அழைத்து உல்லாசமாக இருந்து வந்தோம். சிலர் முரண்டு பிடித்தனர். அவர்களைத்தான் அடித்து, உதைத்து, பணம் பறித்து வந்தோம். 

அப்போது எங்கள் கும்பலில் உள்ள ஒருவரின் தங்கையையும், சபரிராஜன் காதலித்து உல்லாசம் அனுபவித்து வீடியோ எடுத்து வைத்திருந்தார். அவரையும் ஒருநாள் எங்கள் பண்ணை வீட்டுக்கு எங்களது மிரட்டலுக்கு பயந்து அழைத்து வந்தார். அப்போது எங்களைப் பார்த்தவுடன் நண்பனின் சகோதரி, கண்டுபிடித்து விட்டு ஓடிப்போய் என் நண்பரிடம் சொல்லிவிட்டாள். இதனால் எனது நண்பனும் அவனது உறவினர்களும் சேர்ந்துதான், சபரிராஜன், சதீஷ்,வசந்தகுமார், மணிகண்டன் மற்றும் என்னையும் தூக்கிக் கொண்டு போய் சரமாரியாக அடித்து உதைத்தனர். 

இதன் பின் தான்  எங்கள் செல்போனை பறித்துக் கொண்டனர். எங்களை அடிப்பதை வீடியோவும் எடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.  இந்த விவகாரம் வெளியில் தெரிய ஆரம்பித்து பத்திரிகையில், தொலைக்காட்சிகளில் செய்தியாக வந்தது. என்னையும், மணிகண்டனையும் விடுவித்து விட்டுவிட்டு மற்ற 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  நான் தலைமறைவாக இருந்ததால், பின்னர் என்னையும் போலீசார் கைது செய்தனர் என சிபிசிஐடி போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பொள்ளாச்சி செக்ஸ் மாஃபியாக்கள் தங்கள் நண்பர்கள், உறவினர்கள் மூலம் அறிமுகம் கிடைக்கப் பெற்று பள்ளி, கல்லூரி மாணவிகள், பணிக்குச் செல்வோர், வீட்டைக் கவனிக்கும் பெண்கள் எனப் பல தரப்பினரையும் எளிதில் நேரடியாக அணுகக்கூடியவர்களை  டார்கெட் பண்ணி சம்பந்தப்பட்ட பெண்களுடன் பழகி அவர்களை தங்களது உல்லாசத்துக்கு பயன்படுத்தி  வீடியோவும் எடுத்து மிரட்டி வந்துள்ளார்கள். இப்படி நாளுக்கு நாள் ஸ்கெட்ச் போட்டு தூக்கிய இவர்கள் கடைசியாக சுற்றி வளைத்து நண்பனின் தங்கையை காதலித்து உல்லாசம் அனுபத்து வீடியோ எடுத்து வைத்ததும் தெரியவந்துள்ளது.