Asianet News TamilAsianet News Tamil

ரூ. 1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ. 20,000! ஆன்லைன் டிரேடிங் மூலம் கோடிக்கணக்கான பணத்தை ஆட்டையை போட்ட பெண்

கோவை பன்னி மடிப்பகுதியை சேர்ந்த மதுமிதா(32). இவர் உடன் படித்தவர்களிடம் அறிமுக மாணவர்களிடம் ஆன்லைன் டிரேடிங் மூலமாக புதிதாக தொழில் தொடங்க உள்ளதாகவும் அதில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என கூறி நம்ப வைத்துள்ளார்.

Multi crore scam through online trading.. Coimbatore teenager handed over to police tvk
Author
First Published May 2, 2024, 2:01 PM IST

ஆன்லைன் டிரேடிங் மூலம் அதிக லாபம் தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட பெண்ணை பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். 

கோவை பன்னி மடிப்பகுதியை சேர்ந்த மதுமிதா(32). இவர் உடன் படித்தவர்களிடம் அறிமுக மாணவர்களிடம் ஆன்லைன் டிரேடிங் மூலமாக புதிதாக தொழில் தொடங்க உள்ளதாகவும் அதில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என கூறி நம்ப வைத்துள்ளார். மேலும் ஒரு லட்சம் ரூபாய் முதலிடு செய்தால் மாதம் தோறும் 20,000 ரூபாய் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். 

இதையும் படிங்க: என்ன நடிப்புடா சாமி! தாலி கட்டிய பொண்டாட்டிய கொலை செய்துவிட்டு நாடகமாடிய பாதிரியார்! சிக்கியது எப்படி?

 இதனை நம்பி இருபது பேர் இரண்டரை கோடி ரூபாய் வரை முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. முதல் மாதம் மட்டும் லாபத்தொகை என்ற பெயரில் பணத்தை கொடுத்த மதுமித்த முதலீடு செய்த நிறுவனத்தில் தான் இழப்பை சந்தித்ததாகவும் விரைவில் நீங்கள் செலுத்திய பணத்தை பெற்று தருவதாக கூறிவிட்டு பின்னர் திடீரென தலைமறைவாகியுள்ளார். 

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த மதுமிதாவை பாதிக்கப்பட்டவர்கள் தேடி வந்த நிலையில் அவர் துபாயில் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் துபாயிலும் மோசடி செய்ததாக கூறப்படும் நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க இருப்பது தெரிய வந்தவுடன் துபாயிலிருந்து விமானம் மூலம் மதுமிதா கேரளாவிற்கு வந்துள்ளார்.

இதனை அறிந்த எர்ணாகுளத்தை சேர்ந்த பாதிக்கப்பட்ட நபர் விமான நிலையத்திலிருந்து உதவி செய்வது போல மதுமிதாவை கோவைக்கு காரில் அழைத்து வந்திருக்கிறார். இதனை அறிந்த பாதிக்கப்பட்ட அனைவரும் கோவை பந்தய சாலையில் உள்ள காவல்நிலைத்தில் குவிந்தனர். இதனை அடுத்து மதுமிதாவை காவல் நிலையத்தில் ஒப்படைக்க சென்ற போது காவலர்கள் இந்த வழக்கை எடுக்க முடியாது என்றும் மாநகர குற்ற பிரிவிற்கு புகார் அளிக்க அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க:  40க்கும் 21க்கும் கள்ளத்தொடர்பு! உல்லாசத்துக்கு தந்தை இடையூறு! சத்தமே இல்லாமல் கதையை முடித்து நாடகமாடிய மகள்!

இந்த விவகாரம் தொடர்பாக மதுமிதா விளக்கம் கேட்டபோது இரண்டு கோடி ரூபாய் துபாயில் முதலிடு செய்து இழந்ததாகவும் தற்பொழுது கால அவகாசம் கேட்டிருப்பதாக கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார உரிய விசாரணை  மேற்கொண்டு இழந்த பணத்தை பெற்று தர வேண்டுமென பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios