பெண்களுக்கு தொல்லை கொடுக்கும் ஆண்களை பிடிக்க போலீசார் நடத்திய 'ஆப்ரேஷன் ரோமியோ' மூலம் கடந்த 6 மாதங்களில் 800 பேரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். 

டெல்லி  நகரில் பெண்களுக்கு தொல்லை கொடுக்கும் நிகழ்வு அதிகரித்து வருவதாக வந்த புகாரை அடுத்து டெல்லி போலீசார் "ஆப்ரேஷன் ரோமியோ" என்ற ஒரு தனிப்படையை அமைத்து அதில் சுமார் 100 ஆண் போலீசாரும்,  20க்கும் மேற்பட்ட பெண்  போலீசாரும் பணியில் ஈடுபட்டனர். இந்த ஆப்ரேஷன் ரோமியோ ரகசியமாக கண்காணிப்பது இந்த படையினரின் முக்கிய பணியாக இருந்து வந்தது. 

சந்தேகம் படும் நபர் மற்றும் பெண்கள் நடமாடும் பகுதியில் உலா வரும் இளைஞர்கள் என கண்ணி வைத்து போலீசார் செயல்பட்டனர். இதில் கடந்த 6 மாதங்களில் 5 முறை அந்த ஆப்ரேஷன் ' நடத்தப்பட்டது. இந்த ஆப்ரேஷனில் இது  வரை மொத்தம் சுமார் 800 பேர் பிடிபட்டனர். காரணம் இல்லாமல் சுத்துவது, உரிய ஆவணங்கள் ஏதுமில்லாமல் சம்பந்தம் இல்லாத இடங்களில் பெண்களுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த நபர்களை போலீசார் அதிரடியாக தூக்கியது . மேலும் 248  பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதேபோல கடந்த மார்ச் மாதம் ஆபரேஷன் ரோமியோ என்ற பெயரில், 125 இளைஞர்கள் ஒரே இரவில் ஹரியானா போலீசார் கைது செய்தனர். ஹரியானா மாநிலம் குருகிராமில், எம்.ஜி.ரோடு பகுதியில், குறிப்பிட்ட வணிக  வளாகங்களுக்கு பெண்களுக்கு எதிரான நடவடிக்கைள் நடப்பதாக எங்களுக்குத் தொடர் புகார் வந்தவண்ணம் இருந்ததது. அந்தப் பகுதியில் செல்லும் பெண்களுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுப்பதாகத்  தகவல்கள்வந்ததை அடுத்து கமிஷனரின் மேற்பார்வையில் ஆபரேஷன் ரோமியோ என்ற பெயரில் நேரடி கண்காணிப்பில் 125 பேரை ஒரே இரவில் கைது செய்தனர்.