Asianet News TamilAsianet News Tamil

பரபரப்பு..! புகார் கொடுத்ததால் லத்தியால் கொடூரமாக தாக்கப்பட்ட மாற்றுதிறனாளி..மூன்று போலீசார் சஸ்பெண்ட்..

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் கள்ளசந்தையில் சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்கப்படுவதை போலீசாரிடம் புகார் கொடுத்த கண்பார்வையற்ற மாற்றுதிறனாளியை, காவல்நிலையத்தில் வைத்து போலீசார் லத்திதால் கொடூரமாக தாக்கியதாக எழுந்த குற்றச்சாட்டில், தற்போது மூன்று காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

A disabled person who was brutally beaten by Lathi for complaining
Author
Pudukkottai, First Published Mar 17, 2022, 3:01 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் கள்ளசந்தையில் சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்கப்படுவதை போலீசாரிடம் புகார் கொடுத்த கண்பார்வையற்ற மாற்றுதிறனாளியை, காவல்நிலையத்தில் வைத்து போலீசார் லத்திதால் கொடூரமாக தாக்கியதாக எழுந்த குற்றச்சாட்டில், தற்போது மூன்று காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கள்ளச்சந்தையில் மது விற்பனை:

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள கவலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர். கண்பார்வையற்ற மாற்றுதிறனாளியான இவர், அப்பகுதியில் கள்ளச்சந்தையில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக எஸ்.பி அலுவலகத்திற்கு செல்போனில் ஆன்லைனில் புகார் அளித்துள்ளார்.

A disabled person who was brutally beaten by Lathi for complaining

இச்சூழலில் தான், இந்த புகாரை குறித்து விசாரிக்குமாறு எஸ்.பி அலுவலகத்திலிருந்து விராலிமலை காவல்நிலையத்திற்கு உத்தரவு சென்றுள்ளது. பின்னர், இதுக்குறித்து விசாரிக்க விராலிமலை காவல்நிலைய பெண் காவலர் ஒருவர், மாற்றுதிறனாளி சங்கரை தொடர்புக்கொண்டு தகவல் கேட்டுள்ளார். அந்த பெண் காவலரிடம் போனில் தனக்கு தெரிந்த விவரங்களை சொல்லிக்கொண்டிருந்த போது,  அந்த காவல்நிலையத்தில் பணிபுரியும் மற்ற காவலர்களான செந்தில், பிரபு, அசோக் ஆகிய மூவரும் சங்கர் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

போலீசார் தாக்குதல்:

மேலும் அங்கு சென்று, மாற்றுதிறனாளி சங்கரை பிடித்து தகாத வார்த்தைகளால் கேவலமாக பேசியதோடு மட்டுமல்லாமல் வாகனத்தில் ஏற்றி காவல்நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர். பின்னர், காவல்நிலையத்தில் பின்புறத்திலுள்ள சாய்த்து வைத்து லத்தியாலும் பூட்ஸ் காலாலும் கொடூரமாக தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த சங்கர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

A disabled person who was brutally beaten by Lathi for complaining

மேலும் படிக்க: நினைக்கும் போதெல்லாம் பல நடிகைகளுடன் உல்லாசம்.. பணத்தை தண்ணீராய் வாரி இறைத்த நீராவி முருகன்.. அதிர்ச்சி தகவல்

பணியிடை நீக்கம்:

இந்நிலையில் புகார் கொடுத்த நபர் மீதே காவலர்கள் நடத்திய மனிதாபிமானமற்ற கொடூர தாக்குதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மத்திய மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணன், புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி நிஷா பார்த்திபன் ஆகியோரது உத்தரவின் பேரில் 3 போலீசாரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக குற்றச்சாட்டிற்குள்ளான செந்தில், அசோக், பிரபு ஆகிய மூன்று காவலர்களும் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட நிலையில், தற்போது பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க: அடிப்பாவி.. பிள்ளைகளை தவிக்கவிட்டு 2வது முறையாக ஓட்டம்.. இறுதியில் கள்ளக்காதல் ஜோடி செய்த காரியம்.!

Follow Us:
Download App:
  • android
  • ios