என் வயிறு எரியுது; நீதிமன்றத்தில் பள்ளி நிர்வாகிகளுக்கு சாபம் விட்டு கதறி அழுத மாணவி ஸ்ரீமதியின் தாயார்
கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி வழக்கில், சம்பவத்தன்று காலை முதல் பள்ளி நிர்வாகத்தினர் காவல் துறையினர் மாணவியின் தாய் ஆகியோர் தொலைபேசி உரையாடல்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என மாணவி ஸ்ரீமதியின் தாய் கோரிக்கை.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் பள்ளி ஆசிரியைகள் கீர்த்திகா, ஹரிப்பிரியா ஆகியோரை வழக்கில் இருந்து நீக்கம் செய்ததற்கு மாணவியின் பெற்றோர் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் வழக்கில் இருந்து நீக்கப்பட்ட ஆசிரியர்கள் கீர்த்திகா, ஹரிப்பிரியா ஆகியோரை மீண்டும் இணைக்க வேண்டும். வழக்கிற்குத் தேவையான ஆவணங்களை வழங்க வேண்டும் என்று மாணவி ஸ்ரீமதியின் தாயார் செல்வி மனுவின் அளித்திருந்தார்.
மனுவின் அடிப்படையில், கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மூன்றாவது முறையாக இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்ற உத்தரவின் பேரில், இந்த விசாரணைக்காக, பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன் ஆகிய மூவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர். இதேபோல, மாணவி ஸ்ரீமதியின் தாயார் செல்வியும் விசாரணைக்காக, நீதிமன்றத்திற்கு வந்திருந்தார்.
தஞ்சையில் உயிரிழந்த மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்தி அனைவரையும் கண்கலங்கச் செய்த பெற்றோர்
அப்போது, பள்ளி நிர்வாகிகளை பார்த்த செல்வி, மார்பில் அடித்துக் கொண்டு, பெத்த வயிறு பத்திகிட்டு எரியுது, நீங்களெல்லாம் மண்ணா போய்டுவீங்கனு சொல்லி, கதறி அழுதது பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, விசாரணை நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீராம், வழக்கு விசாரணையை வரும் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இளம் தாய்மார்கள், கருவுற்ற பெண்களுக்கான நிதி உதவியை இழுத்தடிப்பதா? ராமதாஸ் ஆவேசம்
பின்னர் நீதிமன்றத்திற்கு வெளியே வந்து பேட்டியளித்த செல்வி தரப்பு வழக்குறிஞர் பாப்பாமோகன், கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி வழக்கில், சம்பவத்தன்று காலை முதல் பள்ளி நிர்வாகத்தினர், காவல் துறையினர், மாணவியின் தாய் ஆகியோரது தொலைபேசி உரையாடல்கள் மற்றும் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை நகல், வழக்கு சொத்து ஆவணம் (ஃபார்ம் 95) ஆகியவற்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதியிடம் கோரிக்கை வைத்தோம். நாங்கள் கேட்ட இந்த ஆவணங்களை நீதிமன்றம் எங்களுக்கு வழங்கினால் வழக்கை நாங்கள் தொடர்ந்து நடத்துவதற்கு ஏதுவாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.