உல்லாச வாழ்க்கைக்காகவே நீராவி முருகன் இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. துணை நடிகைகளுக்கு தண்ணீராக பணத்தை செலவழித்துள்ளான்.
என்கவுன்டரில் சுட்டு கொல்லப்பட்ட பிரபல ரவுடி நீராவி முருகன் பல நடிகைகளும் உல்லாச வாழ்க்கை நடத்தியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் அருகே உள்ள நீராவிமேட்டை சேர்ந்தவர் நீராவி முருகன் (48). பிரபல ரவுடி. இவர் மீது சென்னை, தூத்துக்குடி, ஈரோடு உட்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் ஆள் கடத்தல், கொலை, கொள்ளை உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றன. குறிப்பாக திமுக முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கொலை செய்யப்பட்ட வழக்கில் நீராவி முருகன் குற்றவாளியாக இருந்தார்.

தீவிர தேடுத் வேட்டை
இந்நிலையில், ஒட்டஞ்சத்திரம் அருகே அண்மையில் நடந்த ஒரு கொலை வழக்கில் நீராவி முருகனுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனால், அவரை கைது செய்ய தனிப்படை அமைத்து தீவிரமாக தேடிவந்தனர். மேலும், திண்டுக்கல் மாவட்டம் பழனி நகரில் 40 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு தொடர்பாகவும் போலீசார் அவரைத் தேடி வந்தனர்.
உல்லாச வாழ்க்கை
உல்லாச வாழ்க்கைக்காகவே நீராவி முருகன் இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. துணை நடிகைகளுக்கு தண்ணீராக பணத்தை செலவழித்துள்ளான். அவர்களுக்கு அன்பளிப்பாக நகைகளையும் கொடுத்து அசத்தி வந்துள்ளார். ஹோட்டல்களுக்கு கூட்டி செல்வாராம். குற்றச்செயல்களில் ஈடுபட்ட பிறகு தலைமறைவாக இருப்பதற்காக நிரந்தரமாக சில ஆசைநாயகிகளை நீராவி முருகன் வைத்திருந்தாக கூறப்படுகிறது.

என்கவுன்டரில் சுட்டுக்கொலை
இந்நிலையில், பல்வேறு மாதங்களாக நீராவி முருகனை தேடி வந்த நிலையில் நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் இருந்து களக்காடு செல்லும் சாலையில் உள்ள பகுதிகளில் பதுங்கியிருப்பதாக திண்டுக்கல் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சப்-இன்ஸ்பெக்டர் இசக்கிதுரை தலைமையிலான தனிப்படையினர் இன்று நெல்லை வந்துள்ளனர். நாங்குநேரிக்கு அவர்கள் சென்றபோது நீராவி முருகன் அங்கிருந்து களக்காடு சாலையில் சென்று கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. அவரை மடக்கிப் பிடிக்க முயன்றபோது போலீசாரை அரிவாளைக் கொண்டு வெட்டியுள்ளார். மூன்று காவலர்களுக்கு காயம் ஏற்பட்ட நிலையில் போலீசார் அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
