சின்னத்திரை நடிகை சித்ரா தனியார் ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளது. விஜே சித்ராவிற்கும் ஹேமந்த் ரவிக்கும் கடந்த அக்டோபர் மாதம் பதிவுத் திருமணம் நடைபெற்றுள்ளதால் வரதட்சணை கொடுமை போன்ற ஏதாவது சிக்கல்கள் இருக்குமோ? என்ற சந்தேகத்தில் ஆர்.டி.ஓ.விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதனிடையே இன்று காலை 11 மணி அளவில் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சித்ராவின் உடல் கூராய்வு செய்யப்பட்டது. மருத்துவர் சதீஷ் தலைமையில் இரண்டு மருத்துவர்கள் பிரேத பரிசோதனையில் ஈடுபட்டனர். தற்போது 12.35 மணி அளவில் பிரதேச பரிசோதனை நிறைவை அடைந்துள்ளது. இன்னும் சற்று நேரத்தில் சித்ராவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. 

பிரதேச பரிசோதனை அறிக்கை முதலில் காவல் துறையினரிடமே ஒப்படைக்கப்படும் என்பதால், போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் ஹேமந்த் வைக்கப்பட்டுள்ளார். இரண்டாவது நாளாக நசரத்பேட்டை காவல்நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரான அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதையடுத்து சக நடிகர், நடிகைகளிடமும், உறவினர், நண்பர்களிடமும் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.