நடிகை சன்னி லியோன் கவர்ச்சி ஹீரோயினாக தற்போது பல பாலிவுட் படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருபவர். மேலும் தற்போது தமிழில் உருவாகி வரும் 'வீரமாதேவி' என்கிற படத்தில் தனி கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் எப்போதும் மிகவும் துறுதுறுவென இருக்கும் சன்னி லியோன், அவ்வப்போது படப்பிடிப்பில் கிடைக்கும் ஓய்வு நேரங்களில் மற்றவர்களை இவர் பயமுறுத்துவதும்,  அவர்கள் திரும்பி சன்னியை பயமுறுத்துவது  என குறும்புத்தனமான பல விளையாட்டுகள் அரங்கேறி வருகிறது. 

சமீபத்தில் படம் குறித்த படக்குழுவினருடன் அமர்ந்து சன்னி லியோன் ஆர்வமாக பேசிக்கொண்டிருந்தபோது பின்னால் இருந்து மறைந்த படி ஒரு நபர் கை போன்ற பிளாஸ்டிக் பொம்மை ஒன்றை சன்னி லியோனுக்கு தெரியாமல் பின்னால் கொண்டு வந்து பயமுறுத்தினார். இதனை சற்றும் எதிர்பாராத அவர் பயந்த படி எழுந்து அது விளையாட்டு என தெரிந்ததும் ஏமார்ந்து போனார்.

பின்னர் அதே போல் ஒரு விளையாட்டை சன்னி லியோனி படப்பிடிப்பு தளத்தில் அரங்கேற்றியுள்ளார். படக்குழுவினரிடம் மிகவும் ஆர்வமாக நடிகை ஒருவர் கதை குறித்து பேசிக்கொண்டிருந்தபோது, யாருக்கும் தெரியாமல் தன்னுடைய ஹாண்ட் பேகில் இருந்து, ஒரு  தண்ணீர் பாட்டிலை எடுத்து, அந்த நடிகை மீது சன்னி லியோன் வீசினார்.  

 

ஆனால் அந்த பாட்டில் சன்னியின் குறி தவறியதால், நடிகை மீது படாமல் கீழே விழுந்தது.  இது குறித்த வீடியோவை சன்னி லியோன் வெளியிட்டு தன் மீது பாட்டில் வீசியது வெற்றிகரமாக நடந்தது. ஆனால் நான் வீசிய பாடல் அவர் மேல் பட வில்லை இருந்தாலும் பழிவாங்கியே தீருவேன் என குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ மிகவும் வைரலாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகிறது.