எல்லா வங்கியின் நெட் பேங்கிங்கும் ஒரே தளத்தில்! இனி UPI பேமெண்ட் குறையும்!!
நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) நெட் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் பேமெண்ட்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஐந்து முதல் ஆறு வங்கிகள் முதற்கட்டமாக இணைக்கப்படும், மீதமுள்ள வங்கிகள் பின்னர் இணைக்கப்படும்.
New Net Banking System
நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) நெட் பேங்கிங் (Net Banking) மற்றும் மொபைல் பேங்கிங் (Mobile Banking) பேமெண்ட்களை (Payments) ஒருங்கிணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதற்கான பணிகள் இன்னும் சில மாதங்களில் தொடங்கும். முதலில் ஐந்து முதல் ஆறு வங்கிகள் இணைக்கப்படும். மீதமுள்ள வங்கிகள் அடுத்த கட்டங்களில் இணைக்கப்படும். இதன் மூலம் ஆன்லைனில் பணம் செலுத்துவது மேலும் எளிதாகும்.
Net Banking Interoperability
நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ) ஐந்தாறு வங்கிகளுடன் இணைந்து நெட் பேங்கிங் (Net Banking) மற்றும் மொபைல் பேங்கிங் பேமெண்ட்களை ஒரே தளத்தில் ஒருங்கிணைப்பதற்கான வேலையைத் தொடங்க உள்ளது. அடுத்த சில மாதங்களில் முதல் கட்டப் பணிகள் தொடங்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
NPCI Bharat BillPay
என்பிசிஐ பாரத் பில்பே (NPCI Bharat BillPay) மூலம் இந்த முயற்சி முன்னெடுக்கப்படுகிறது. இது மும்பையைச் சேர்ந்த என்பிசிஐயின் துணை நிறுவனம் ஆகும். எகனாமிக் டைம்ஸ் செய்தியின்படி, ஐசிஐசிஐ வங்கி (ICICI Bank) மற்றும் எச்டிஎஃப்சி வங்கி (HDFC Bank) ஆகியவை இதில் முன்னணியில் இருப்பதாகத் தெரிகிறது. மேலும் மூன்று நான்கு வங்கிகளும் இதில் இணைகின்றன.
UPI transactions
இந்த வசதி எப்போது தொடங்கும் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஆனால் முதல் கட்டமாக சில வங்கிகளின் நெட் பேங்கிங் சேவைகள் விரைவில் ஒருங்கிணைக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.
e-Commerce transactions
நெட் பேங்கிங் சேவை ஒன்றோடொன்று இணைக்கப்பட்டால், வாடிக்கையாளர்கள் இ-காமர்ஸ் (e-Commerce) இணையதளங்களில் இருந்து பொருட்களை வாங்கும்போது, எந்த வங்கியின் நெட் பேங்கிங்கைப் பயன்படுத்தியும் பணம் செலுத்த முடியும். தற்சமயம் வங்கிகள் பேமெண்ட் அக்ரிகேட்டர்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும். பின்னர் அவர்கள் வணிகர்களை நெட் பேங்கிங்குடன் இணைக்க வேண்டும் என்ற நிலை உள்ளது.
UPI payment
வெவ்வேறு வங்கிகளின் நெட் பேங்கிங் (Net Banking) சேவைகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டால், இந்த சிக்கல் முடிவுக்கு வரும். அப்போது ஒவ்வொரு வங்கியின் பேமெண்டும் எல்லா இடங்களிலும் செல்லுபடியாகும். இது UPI பேமெண்ட்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும் உதவும். கடந்த சில ஆண்டுகளில் UPI மிக வேகமாக வளர்ந்துள்ளது. இதன் காரணமாக டெபிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் பயன்பாடு குறைந்துள்ளது.
Interoperability in Net Banking Service
இந்நிலையில், பெரிய வங்கிகள் ஒருங்கிணைந்த நெட் பேங்கிங் (Net Banking) சேவையைத் தொடங்கினால், மக்கள் இதைப் பயன்படுத்தத் தொடங்குவார்கள். பின்னர் படிப்படியாக சிறிய வங்கிகளும் இதில் சேரும். இதன் மூலம் UPI பேமெண்ட்களில் அதிகப்படியான டிராஃபிக்கைத் தவிர்க்கலாம்.
Internet Banking
காப்பீட்டு பிரீமியம், வரி செலுத்துதல் போன்ற பெரிய பேமெண்ட்களுக்கு மக்கள் தங்கள் வங்கியின் செயலி அல்லது இணையதளம் மூலம் பணம் செலுத்த விரும்புகிறார்கள். இந்த முறையில் பணம் செலுத்தும்போது பரிவர்த்தனைகள் பெரும்பாலும் வெற்றிகரமாக இருக்கின்றன என்பது ஒரு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. எனவே நெட் பேங்கிங் (Net Banking) முறை பெரிய தொகையைச் செலுத்துவதற்கும் மிகவும் நம்பகமானதாக உள்ளது.
Payment Gateways
தற்போது, நெட் பேங்கிங் மூலம் பணம் செலுத்த, வணிகர்கள் மற்றும் அக்ரிகேட்டர்கள் மும்பையை தளமாகக் கொண்ட பில்டெஸ்க் போன்ற பேமெண்ட் கேட்வே (Payment Gateway) நிறுவனங்கள் மூலம் பெரிய வங்கிகளின் நெட் பேங்கிங் அமைப்புடன் இணைகின்றனர். இது கார்டு அல்லது UPI பேமெண்ட் போல இல்லை. நெட் பேங்கிங் பொதுவாக மிகப் பெரிய தொகையைப் பரிவர்த்தனை செய்பவர்களுக்கு பயன்படுகிறது.
Online Banking transaction
ரிசர்வ் வங்கியின் (RBI) தரவுகளின்படி, அக்டோபர் மாதத்தில் மட்டும் சுமார் 420 மில்லியன் பேமெண்டுகள் நெட்பேங்கிங் (Net Banking) மூலம் நடைபெற்றுள்ளன. இவற்றின் மூலம் மொத்தம் ரூ.100 லட்சம் கோடிக்கு மேல் பரிவர்த்தனை நடந்துள்ளது. அதாவது, ஒவ்வொரு பரிவர்த்தனையிலும் சராசரியாக ரூ.2.5 லட்சத்திற்கும் அதிகமான பணம் அனுப்பப்பட்டுள்ளது.