Sorgavaasal Review : சித்தார்த் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக நடித்துள்ள சொர்க்கவாசல் திரைப்படம் இன்று ரிலீஸ் ஆன நிலையில், அதன் விமர்சனத்தை பார்க்கலாம்.

ஆர்.ஜே.வாக பணியாற்றி வந்த பாலாஜி, படிப்படியாக சினிமாவில் காமெடி நடிகனாக நடித்து வந்தார். அதன்பின்னர் எல்.கே.ஜி படம் மூலம் ஹீரோவாக உருவெடுத்த அவர், அப்படத்தின் வெற்றிக்கு பின்னர் காமெடி ரோலில் நடிப்பதை நிறுத்துவிட்டு முழுநேர ஹீரோவாகிவிட்டார். இவர் ஹீரோவாக நடிப்பது மட்டுமின்றி மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் போன்ற படங்களை இயக்கியும் உள்ளார். இவர் அடுத்ததாக சூர்யா 45 படத்தை இயக்கி வருகிறார்.

இந்த நிலையில், ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக நடித்துள்ள சொர்க்கவாசல் திரைப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படத்தை சித்தார்த் இயக்கி உள்ளார். அவர் இயக்கும் முதல் படம் இதுவாகும். இதற்கு முன்னர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படத்தை இயக்கி உள்ளார் சித்தார்த். சொர்க்கவாசல் திரைப்படத்தில் சானியா ஐயப்பன், செல்வராகவன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் எக்ஸ் தள விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்... சொர்க்கவாசல் கதை என்னுடையது; வெடித்த சர்ச்சை! வைரலாகும் RJ பாலாஜி பேசிய வீடியோ!

1999-ல் நடந்த உண்மை சம்பவம் தான் இந்த சொர்க்கவாசல். செய்யாத தவறுக்காக சிறையில் சிக்கிக்கொள்ளும் ஒரு கைதியை பற்றிய கதை தான் இது. இப்படத்தின் முதல் பாதி அருமையாக உள்ளது. இரண்டாம் பாதி தான் படத்திற்கு முக்கிய பங்காற்றி உள்ளது. ஆர்.ஜே.பாலாஜியின் நடிப்பு அற்புதமாக உள்ளது. செல்வராகவன் நடிப்பும் அருமை என குறிப்பிட்டுள்ளார்.

Scroll to load tweet…

சொர்க்கவாசல் படத்தில் ஹீரோ, வில்லன் என யாரும் இல்லை. ஆர்.ஜே.பாலாஜி, செல்வராகவன் என அனைவரும் இயக்குனர் சித்தார்த்தின் கதையை நம்பி கதாபாத்திரங்களை கச்சிதமாக செய்துள்ளனர். 1999-ல் சென்னை சிறையில் நடந்த கதை. தொழில்நுட்ப ரீதியாக தனித்து நிற்கும் படம். காட்சியமைப்பு, இசை மற்றும் சண்டைக் காட்சிகள் அருமை. சினிமாவுக்காக எந்தக் காட்சியையும் மிகைப்படுத்தாமல் என்ன நடந்ததோ அதை கச்சிதமாக காட்டி இருக்கிறார். நல்ல முயற்சி என பதிவிட்டுள்ளார்.

Scroll to load tweet…

சிறந்த கிரைம் திரில்லர் படம் தான் இந்த சொர்க்கவாசல், முதல்பாதி எமோஷனலாகவும் இரண்டாம் பாதி சிறையில் நடக்கும் கொடூரத்தையும் கண்முன் காட்டுகிறது. ஆர்.ஜே.பாலாஜி ஒரு நடிகனாக தன்னுடைய இன்னொரு பரிணாமத்தை காட்டி உள்ளார். செல்வரகாவன் கேங்ஸ்டராக சிறப்பாக நடித்திருக்கிறார். இறுகப்பற்று படத்துக்கு பின் சானியா ஐயப்பனின் பெஸ்ட் படம் இது. உண்மை கதையை எடுத்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

Scroll to load tweet…

சொர்க்கவாசல் படத்தை ஒரு புதுமுக இயக்குனர் இயக்கி உள்ளார் என நம்பவே முடியவில்லை. 1999-ல் சென்னை சிறையில் நடந்த சம்பவத்தை அப்படியே கண்முன் கொண்டுவந்திருக்கிறார். படத்தின் மேக்கிங் டாப் கிளாஸ் ஆக உள்ளது. நடிகர்கள் ஆர்.ஜே.பாலாஜி, செல்வராகவன், கருணாஸ் என அனைவரின் நடிப்பும் அருமை. 137 நிமிடத்தில் விறுவிறுப்பான கதையுடன் சீரியஸான படம் பார்ப்பவர்களுக்கு பிடிக்கும் படமாக இது இருக்கும் என பதிவிட்டுள்ளார்.

Scroll to load tweet…

சொர்க்கவாசல் ஜெயில் திரில்லர் படம். ராவாகவும் ரியலாகவும் உள்ளது. இதுவரை பார்க்காத ஆர்.ஜே,பாலாஜியை பார்க்க முடிகிறது. கிறிஸ்டோ சேவியரின் பின்னணி இசை சூப்பர். இயக்குனர் சித்தார்த் முதல் படத்திலேயே கவனம் ஈர்த்துள்ளார் என பதிவிட்டிருக்கிறார்.

Scroll to load tweet…

இதையும் படியுங்கள்... நான் பாவாடையும் கிடையாது; சங்கியும் கிடையாது - சொர்க்கவாசல் பட விழாவில் ஆர்.ஜே.பாலாஜி பேச்சு