MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • நான் பாவாடையும் கிடையாது; சங்கியும் கிடையாது - சொர்க்கவாசல் பட விழாவில் ஆர்.ஜே.பாலாஜி பேச்சு

நான் பாவாடையும் கிடையாது; சங்கியும் கிடையாது - சொர்க்கவாசல் பட விழாவில் ஆர்.ஜே.பாலாஜி பேச்சு

ஆர்.ஜே.பாலாஜி நடித்த சொர்க்கவாசல் திரைப்படம் நவம்பர் 29-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அதன் பிரஸ் மீட் சென்னையில் நடைபெற்றது.

3 Min read
Author : Ganesh A
Published : Nov 24 2024, 02:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Sorgavaasal Movie Press Meet

Sorgavaasal Movie Press Meet

நடிகர் ஆர். ஜே. பாலாஜி ஹீரோவாக நடித்துள்ள படம் சொர்க்கவாசல். இப்படம் வருகிற நவம்பர் 29-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி பேசியதாவது : "அனைவருக்கும் வணக்கம். பிரதமர், ஜனாதிபதி, முதலமைச்சர் ஆகிய மூவரைத் தவிர அனைவருக்கும் நன்றி சொல்லி விட்டோம் என நினைக்கிறேன். இந்த டீம் உடன் எனக்கு ஒன்றரை ஆண்டு கால பயணம் இருக்கிறது. இந்தப் படத்தில் நிறைய புதுமுக கலைஞர்கள் பணியாற்றி உள்ளார்கள். 

கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக இவர்கள் படத்தை ரசித்து ரசித்து எடுப்பதை பார்த்து இருக்கிறேன். நான் நடித்த ஒரு படத்தை ரிலீஸிற்கு நான்கு நாள் இருக்கும் இந்த தருணத்திலும் நான் இன்னும் பார்க்கவில்லை. அதற்கு காரணம் நான் அவர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை தான்.  இந்தப் படத்தின் டீசர் வெளியானவுடன் என்னுடைய நண்பர்களான நிறைய ஹீரோக்கள், இப்படத்தின் இயக்குநருக்கு போன் செய்து பாராட்டி இருக்கிறார்கள். 

செல்வராகவன்  ஸ்கிரீன்ல வந்தாலே பெரிய நட்சத்திர நடிகர் போல் இருக்கும். படப்பிடிப்பு தளத்தில் அவர் எப்போதும் அமைதியாக இருப்பார். அவருக்கு நண்பர்களும் மிக குறைவு. படப்பிடிப்பு தளத்தில் அனைவருடனும் மிக குறைவாகவே பேசுவார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Sorgavaasal Pre Release Event

Sorgavaasal Pre Release Event

இப்படம் எனக்கு மிகவும் ஸ்பெஷலானது. ஏனெனில் இப்படத்தை இயக்கிய சித்தார்த் 15 ஆண்டு காலத்திற்கு முன் நான் கிரிக்கெட் விளையாடும் போது எனக்கு பின்னால் நின்று கொண்டிருப்பான். அவனது இயக்கத்தில் தான் தற்போது நடித்திருக்கிறேன்.

இந்த நிகழ்வு எனக்கு மிகவும் ஸ்பெஷல் ஆனது அதற்கு காரணம் என் மனைவி தான். 'தீயா வேலை செய்யணும் குமாரு' படத்தில் தொடங்கிய என்னுடைய நடிப்பு பயணம் இதுவரை 13 ஆண்டுகள் கடந்து விட்டது. இதுவரை என்னுடைய எந்த பட விழாவிற்கும் வருகை தராத என் மனைவி திவ்யா நாகராஜன் இந்த நிகழ்விற்கு வருகை தந்திருக்கிறார். அவர் கலந்து கொள்ளும் முதல் சினிமா நிகழ்வு இது என்பதால் எனக்கு ஸ்பெஷல்.

இதற்கு முன்பு வரை ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழா என்றால் சர்ச்சையை ஏற்படுத்து வகையில் எதையாவது பேச வேண்டும் என்று இருந்தது. ஆனால் நான் என்ன நினைக்கிறேன் என்றால், பேச எதுவும் இல்லை என்றாலும் பரவாயில்ல, படத்தின் கன்டென்ட் நல்லா இருந்தா அது மக்களிடம் ரீச் ஆகிவிடும். 2006ம் ஆண்டிலிருந்து நான் இதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். 

இதையும் படியுங்கள்... குட் பேட் அக்லி படத்தில் இருந்து நீக்கப்பட்ட தேவி ஸ்ரீ பிரசாத்! கங்குவா தான் காரணமா?

34
Sorgavaasal Movie Team

Sorgavaasal Movie Team

விற்பனைக்காக ஒரு கடைக்கு நாம் பிஸ்கட்டை எடுத்து சென்றால் அதை மற்றவர்கள் நன்றாக இருக்கிறது. இல்லை என்று சொல்லத்தான் செய்வார்கள். அதேபோல் தான் சினிமாவும். ரசிகர்களை சென்றடைந்த பின் ஒரு படத்தைப் பற்றி அவர்கள் பிடித்திருக்கா, பிடிக்கலையா என விமர்சனம் செய்வார்கள். ஒரு படம் வெளியான பிறகு அதைப்பற்றி யூடியூப், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். அது அவர்களுடைய சுதந்திரம். 

யாருடைய செல்போனையும் பறிக்க முடியாது. அதனால் விமர்சனம் குறித்த கட்டுப்பாடு நம்மிடம் இல்லை. சொர்க்கவாசல் படத்தில் கன்டென்ட் சூப்பரா இருக்கு என்கிற ஒரே காரணத்திற்காகத் தான் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.  தற்போதெல்லாம் பயம் அதிகமா இருக்கு, வெளியில் தேசியக்கொடியை கையில் ஏந்தி கொண்டு இந்தியன் என்ற உணர்வோடு நின்றால் அதற்கும் ஏதாவது விமர்சனம் செய்வார்களோ என்ற பயம் ஏற்படுகிறது.

44
Sorgavaasal Movie RJ Balaji

Sorgavaasal Movie RJ Balaji

நான் பாவாடையோ, சங்கியும் கிடையாது. அனைத்து அரசியல் கட்சியின் ஐடி விங்கிடமும் ஒரு பணிவான வேண்டுகோள் வைக்கிறேன். நீங்கள் அரசியலை மட்டும் பாருங்கள். சினிமாவை விட்ருங்க. சினிமாவில் வாரந்தோறும் படங்கள் வெளியாகின்றன‌. திரைப்படங்களை விமர்சித்து அதனை அழிப்பதில் எதற்காக உங்களுடைய ஆற்றலை வீணடிக்கிறீங்க. 

அதேபோல் ரசிகர்களிடமும் ஒரு வேண்டுகோளை வைக்கிறேன். படம் பிடிக்கவில்லை என்றால் விமர்சனம் செய்யுங்க. அது உங்களோட உரிமை.  ஆனால் அவர்கள் படம் வந்தால் அடிக்க வேண்டும், இவர்கள் படம் வந்தால் அடிக்க வேண்டும் என்கிற வேலையை மட்டும் செய்யாதீர்கள். ஒருவரை டார்கெட் செய்து விமர்சனம் செய்யாதீர்கள். நாங்கள் ஒரு நல்ல படத்தை எடுத்திருக்கோம். அனைவரின் ஆதரவு இருந்தால் தான் இந்த படமும் ஒரு லப்பர் பந்து போன்றோ அல்லது வாழை படம் போன்றோ வெற்றி பெற்று அனைத்து தரப்பு மக்களிடமும் சென்று சேரும் என கேட்டுக்கொள்கிறேன்," என்றார்.

இதையும் படியுங்கள்... சிகரெட் பிடிப்பதை விட்டுவிட சொன்ன எம்ஜிஆர்.! ரஜினி சொன்ன ருசிகர சம்பவம்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Sai Abhyankkar : அனிருத்தை விட டபுள் மடங்கு பிசியான சாய் அபயங்கர்! அவர் கைவசம் உள்ள ஒரு டஜன் படங்கள் என்னென்ன?
Recommended image2
Bigg Boss 10 : பிக் பாஸ் வீட்டில் நடந்த மிட் வீக் எவிக்‌ஷன்... அதிரடியாக எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர் யார்?
Recommended image3
Diwali OTT Releases : ஓடிடியில் தீபாவளி ரிலீசுக்காக க்யூவில் நிற்கும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் என்னென்ன? முழு லிஸ்ட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved