சென்னையை முடக்கும் Fenjal புயல்: விமான நிலையம், சாலைகள் மூடல் - முதல்வர் ஆய்வு
ஃபெஞ்சல் புயல் இன்று கரையை கடக்கும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Fenjal Storm
கடந்த ஓரிரு தினங்களாக போக்கு காட்டி வந்த Fenjal புயல் இன்று மாலை கரையை கடக்க உள்ளது. புயல் காரணமாக சென்னை, கடலூர், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக பல்வேறு பகுதிகளிலும் இயல்பு நிலை கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னை சர்வதேச விமான நிலையம், நகைக்கடைகள், திரையரங்கங்கள் மூடப்பட்டுள்ளன.
முதல்வர் ஆய்வு
மழை முன்னெச்சரிக்கையாக சென்னை எழிலகத்தில் தமிழக அரசு சார்பில் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் (Mk Stalin) இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கட்டுப்பாட்டு மையத்தில் இருந்தபடி செங்கல்பட்டு, ராணிபேட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களை தொடர்பு கொண்டு முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார்.
மேலும் அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் சென்னையில் எந்த பகுதியிலும் மழைநீர் தேங்கவில்லை. இன்று இரவு புயல் கரையை கடக்கும் என்பதால் கனமழை பெய்யக்கூடும். தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
Indigo
சென்னை சர்வதேச விமான நிலையம்
கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக சென்னை விமான (Chennai Airport) நிலையத்தில் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலையில் ஒருசில விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது விமான நிலையம் முழுமையாக மூடப்பட்டுள்ளது. அதன்படி இன்று மாலை 5 மணி வரை விமான நிலையம் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னையில் இருந்து இயக்கப்படும் இன்டிகோ விமான சேவையின் புறப்பாடு மற்றும் வருகை இன்று ரத்து செய்யப்படுவதா இன்டிகோ INDIGO நிறுவனம் அறிவித்துள்ளது. தொடர்ந்து மாற்று நேரங்களில் விமானங்களை இயக்குவது தொடர்பாக நிறுவனம் சார்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
நகைக்கடைகள்
காலை நேரத்தில் ஆங்காங்கே மழைப்பொழிவு இருந்த நிலையில் நகைக்கடைகள் உட்பட வணிக வளாகங்கள் திறக்கப்பட்டன. ஆனால், அரசின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து இன்றைய தினம் சென்னையில் நகைக்கடைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சாலைகள் மூடல்
கனமழை காரணமாக சென்னையின் பல பகுதிகளிலும் சாலைகளில் மழை நீர் குளம் போல் தேங்கி இருக்கிறது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையின் பல பகுதிகளிலும் சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
Heavy Rain in Tamil Nadu
மழைப்பொழிவு (Chennai Rains)
கடந்த சில மணிநேரங்களில் சென்னை எண்ணூர் பகுதியில் 13 செ.மீ., கத்திவாக்கம் 12 செ.மீ., திருவொற்றியூர் 9 செ.மீ., சோழிங்கநல்லூர் 9 செ.மீ., மணலி 8 செ.மீ., சென்ட்ரல் 8செ.மீ. மழைப் பொழிவு பதிவாகி உள்ளது.
புதுச்சேரி அருகே காரைக்கால், மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் போது கனமழை முதல் மிக கனமழை பெய்யக் கூடும், காற்றின் வேகம் மணிக்கு 90 கி.மீ. அளவில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால்