Asianet News TamilAsianet News Tamil

மாலத்தீவில் மகளுடன் க்யூட் நடனமிடும் ஸ்ரேயா..அன்று பார்த்த அதே கவர்ச்சி

மாலத்தீவிற்கு பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக குடும்பத்துடன் சென்றுள்ள ஸ்ரேயா அங்கு தனது மகள் ராதாவுடன் பிகினில் வெளியிட்டுள்ள வீடியோவும் தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

shriya saran latest hot video
Author
First Published Sep 17, 2022, 8:52 PM IST

ஒரு காலத்தில் முன்னணி நடிகைகளில் பிரபலமாக இருந்தவர் ஸ்ரேயா. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் முன்னணி நாயகர்களுடன் ஜோடி போட்டு எல்லா மொழிகளிலும் பிரபலமாக வலம் வந்த இவர் தமிழில் பாலிவுட் நாயகிகள் ரேஞ்சிற்கு காட்டியிருந்த கவர்ச்சி ரசிகர்களை அவர் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது. அதோடு தென் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக இவர் இருந்தார்.

முன்னதாக தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியான என எனக்கு 20  உனக்கு 18 படம் மூலம் துணை வேடத்தில் தோன்றியிருந்த இவருக்கு மழை படத்தில் நாயகியாகும் வாய்ப்பு கிடைத்தது. ஜெயம் ரவிக்கு ஜோடியாக இந்த படத்தில் மழையில் நனைந்தபடி தாவணி பாவடையில் இவர் காட்டிய கவர்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்திருந்தது. ஸ்ரேயா பின்னர் தனுசுடன் திருவிளையாடல் ஆரம்பம் சூப்பர் ஸ்டாருடன் சிவாஜீ தி பாஸ், விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், விஷாலுடன் தோரணை, ஜீவாவுடன் ரௌத்திரம், சிம்புவுடன் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என வரிசையாக டாப் ஹீரோக்களுக்கலுடன் நடித்தார்.

மேலும் செய்திகளுக்கு... அட...உலகநாயகனின் மகள் ஸ்ருதி ஹாசனா இது? ஆளே அடையாளம் தெரியாதது போல மாறிட்டாரே

மேலும் செய்திகளுக்கு...  காட்டன் சேலையில் கவர்ந்திழுக்கும் ரேஷ்மா..சைட்டுபோஸ் கொடுத்து கவர்ச்சி புயல் வீசும் பாக்கியலட்சுமி நடிகை

இறுதியாக இவர் ஆர்ஆர்ஆர் படத்தில் சரோஜனியாக தோன்றியிருந்தார். இந்த படம் ஆயிரம் கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படமாக அமைந்தது. தற்போது தமிழில் நரகாசுரன், சண்டைக்காரி அதோடு பாலிவுட், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் ஒப்பந்தமாகியுள்ளார்.

 

இதற்கிடையே கடந்த 2018 -ம் ஆண்டு ஆண்ட்ரி கோஷீவ் என்பவரை திருமணம் செய்து கொண்ட ஸ்ரேயாவிற்கு ராதா என்னும் பெண் குழந்தை உள்ளது. அவ்வப்போது தனது குடும்பத்துடன் இவர் வெளியிடும் வீடியோ சமூக வலைதளத்தை நிரப்பி வருகிறது. அந்த வகையில் மாலத்தீவிற்கு பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக குடும்பத்துடன் சென்றுள்ள ஸ்ரேயா அங்கு தனது மகள் ராதாவுடன் பிகினில் வெளியிட்டுள்ள வீடியோவும் தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

மேலும் செய்திகளுக்கு...  சூர்யா - பாலாவின் வணங்கான்..சுவாரஸ்யம் பகிர்ந்த நாயகி கீர்த்தி ஷெட்டி

Follow Us:
Download App:
  • android
  • ios