Asianet News TamilAsianet News Tamil

PM Modi Visit Ayodhya Ram Temple: 103 நாட்களுக்கு பின் அயோத்தி ராமர் கோவிலுக்கு விசிட் அடித்த பிரதமர் மோடி

தேர்தல் பரப்புரைக்காக அயோத்திக்கு சென்றிருந்த பிரதமர் மோடி, அங்குள்ள ராமர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

PM Narendra Modi Visit to ayodhya Ram Mandir after 103 days gan
Author
First Published May 6, 2024, 10:24 AM IST

அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்ட அதற்கான பிரான பிரதிஷ்டை விழா கடந்த ஜனவரி மாதம் 22-ந் தேதி கோலாகலமாக நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் இந்தியா முழுவதிலும் இருந்து சினிமா பிரபலங்களும், அரசியல் தலைவர்களும், தொழிலதிபர்களும் கலந்துகொண்டனர். இதன்பின்னர் மக்களின் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்ட அயோத்தி கோவிலில் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

பிரதிஷ்டை விழாவுக்கு பின்னர் அயோத்தி கோவிலுக்கு செல்லாமல் இருந்து வந்த பிரதமர் மோடி, சுமார் 103 நாட்களுக்கு பின்னர் அங்கு சென்று, நேற்று சாமி தரிசனம் செய்தார். அயோத்திக்கு தேர்தல் பரப்புரைக்காக சென்றிருந்த பிரதமர் மோடி, ராமர் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்ட பின்னர் அங்கு நடைபெற்ற பிரம்மாண்ட ரோட் ஷோவில் பங்கேற்றார். பிரதமர் மோடி அயோத்தி கோவிலுக்கு வருகை தந்தபோது வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டது.

இதையும் படியுங்கள்... அதிகாரம் முக்கியமா? சித்தாந்தம் முக்கியமா? கார்கே, சித்தராமையாவிடம் ராகுல் காந்தி கேள்வி!

PM Narendra Modi Visit to ayodhya Ram Mandir after 103 days gan

பின்னர் அங்கு நடைபெற்ற ரோட் ஷோவில் கலந்துகொண்டார் மோடி. அப்போது உத்திர பிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் உடன் இருந்தார். அயோத்தியில் உள்ள சுக்ரீவா கோட்டையில் தொடங்கிய பிரதமர் மோடியின் ரோட் ஷோ லதா சவுக்கில் நிறைவுபெற்றது. சுமார் 2 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற இந்த ரோட் ஷோவில் வழிநெடுக மக்கள் திரண்டு நின்று, மோடிக்கு மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்ததோடு மோடி மோடி என கோஷமிட்டனர்.

நான்காம் மற்றும் ஐந்தாம் கட்ட மக்களவை தேர்தலின் போது தான் உத்திர பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அயோத்திக்கு அருகில் உள்ள ரேபரேலி, அமேதி மற்றும் சுல்தான்பூர் ஆகிய தொகுதிகளுக்கும் அந்த சமயத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... 3வது கட்ட மக்களவைத் தேர்தல்: 12 மாநிலங்களில் 93 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு

Follow Us:
Download App:
  • android
  • ios