தற்போது இவர் பலவண்ண உடைகளில் அளித்துள்ள வீடியோவும் வைரல் ஆகி வருகிறது.

உலகநாயகன் கமலஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசனம் தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகையாக இருந்து வருகிறார். பாப் பாடகியான இவர் கமலஹாசன் இயக்கத்தில் வெளியான ஹேராம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து பாலிவுட் தெலுங்கு என படங்களில் கமிட்டாகி வந்த இவர், ஏழாம் அறிவு மூலம் தமிழுக்கு நாயகியாக என்ட்ரி கொடுத்தார். இந்தப்படம் பிலிம் பேர் விருது உட்பட பல பாராட்டுகளை பெற்று கொடுத்தது. இதை அடுத்து 3 படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்த இவருக்கு தமிழில் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை.

View post on Instagram

மேலும் செய்திகளுக்கு... காட்டன் சேலையில் கவர்ந்திழுக்கும் ரேஷ்மா..சைட்டுபோஸ் கொடுத்து கவர்ச்சி புயல் வீசும் பாக்கியலட்சுமி நடிகை

பின்னர் தெலுங்கு, பாலிவுட் என சென்றுவிட்ட ஸ்ருதிஹாசன் மீண்டும் விஷாலுக்கு ஜோடியாக பூஜை படத்தில் தோன்றினார். இதை அடுத்து புலியில் விஜய்க்கு ஜோடியாகவும் , அஜித்தின் வேதாளம், சூர்யாவின் சிங்கம் 3 படத்திலும், விஜய் சேதுபதியுடன் லாபம் படத்திலும் தோன்றியிருந்தார் ஸ்ருதிஹாசன். இவர் இறுதியாக நடித்த படம் லாபம் தான். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் போதுமான வரவேற்பை பெறவில்லை.

View post on Instagram

மேலும் செய்திகளுக்கு...சூர்யா - பாலாவின் வணங்கான்..சுவாரஸ்யம் பகிர்ந்த நாயகி கீர்த்தி ஷெட்டி

தற்போது தெலுங்கில் தெலுங்கில் பிஸியாக இருக்கும் இவர் மூன்று படங்களில் கமிட்டாகி உள்ளார். இதற்கிடையே தனது முன்னால் காதல் பிரிவால் சிறிது காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த ஸ்ருதிஹாசன் மீண்டும் தனது பழைய நிலைமைக்குத் திரும்பி தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். அதோட தனது உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள மேலும் உடற்பயிற்சி செய்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ள இவர், அவ்வப்போது தனது காதலனுடன் வெளியிடும் வீடியோக்களும் புகைப்படங்களும் சமூகவலைதளத்தில் வைரலாவது வழக்கம். அந்த வகையில் தற்போது இவர் பலவண்ண உடைகளில் அளித்துள்ள வீடியோவும் வைரல் ஆகி வருகிறது.

View post on Instagram