முன்னணி காமெடி நடிகராக இருக்கும் ரோபோ ஷங்கரின் மாமியார், கடந்த 11 ஆம் தேதி அன்று, உடல்நல குறைவு காரணமாக காலமானார். இவரின் இழப்பு ரோபோ ஷங்கரின் குடும்பத்தை அதிகம் பாதித்தது. இந்த சோகம் மறைவதற்குள், அவருடைய பிறந்த நாள் வர, அதற்கு அவரின் பேத்தி  இந்திரஜா மிகவும் உருக்கமாக தன்னுடைய பாட்டியின் நினைவுகளை கண்ணீரோடு பகிர்ந்துள்ளார்.

தமிழ் திரையுலகில், தனுஷ், அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து காமெடி காட்சிகளில் நடித்து அசத்தி வரும் நடிகர் ரோபோ ஷங்கரின் வீட்டில் அரங்கேறியுள்ள மரண சம்பவத்தால், அவருடைய  குடும்பமே தற்போது சோகத்தில் மூழ்கியுள்ளது.

பிரபல தனியார் தொலைக்காட்சியில், ஒரு ஸ்டண்ட் அப் காமெடியனாக சின்னத்திரையில் தன்னுடைய காமெடி பயணத்தை துவங்கி, சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து, தற்போது தன்னுடைய திறமையால் முன்னணி காமெடியனாக வளர்ந்துள்ளார்.

மேலும் செய்திகள்: குழந்தை பருவ புகைப்படத்தை வெளியிட்டு... தன்னை தானே ஏலியன் என கலாய்த்து கொண்ட பிக்பாஸ் நாயகி ரைசா!
 

இவரை தொடர்ந்து இவருடைய மனைவி பிரியங்கா, நடன கலைஞர் என்பதை தாண்டி  ஸ்டண்ட் அப் காமெடியில் துவங்கி, தற்போது ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து வருகிறார். 

மேலும், ரோபோ ஷங்கரின் மகளும் கடந்த வருடம் தளபதி விஜய் நடிப்பில் வெளியான 'பிகில்' படத்தில் பாண்டியம்மாவாக கால் பந்து களத்தில் இறங்கி அடித்தார். முதல் படத்திலேயே இவருடைய நடிப்பு ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டது. இப்படி ஒட்டுமொத்த குடும்பமே, திரையுலகில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: வேலைக்காரிக்கு முத்தம்... கணவரை கும்மாங்குத்து குத்திய ஷில்பா ஷெட்டி! வீடியோ!
 

இது ஒரு புறம் இருக்க, நடிகர் ரோபோ ஷங்கரின் மாமியார் லலிதா உடல்நல பிரச்சனை காரணமாக கடந்த 11 ஆம் தேதி அன்று,  மரணமடைந்துள்ளார். இதனால் அவருடைய ஒட்டு மொத்த குடும்பமும் சோகத்தில் உள்ளது. இதை அறிந்த ரோபோ ஷங்கரின் ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் வட்டாரத்தை சேர்ந்தவர்கள் அவருக்கு தங்களுடைய ஆறுதலை தெரிவித்து வந்தனர்.

ரோபோ ஷங்கரின் மாமியார், லலிதா இறந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் அவருடைய பிறந்தநாள் வந்துள்ளது. இதனால் ஏற்கனவே அவரின் பிரிவை தாங்க முடியாத குடும்பத்தினருக்கு, இந்த வருடம் அவர் இல்லையே என்கிற வருத்தம் மேலும் அதிகரித்தது.

மேலும் செய்திகள்: பாடகி கனிகா கபூர் பிளாஸ்மாவை எடுக்க மறுத்த மருத்துவர்கள்? வெளியான அதிர்ச்சி தகவல்!
 

தன்னுடைய அம்மத்தாவின் பிரிவை தாங்கி கொள்ள முடியாத, அவரின் பேத்தி  இந்திரஜா மிகவும் உருக்கமாக ஒரு தகவலை பதிவிட்டுள்ளார். இதில், "Happy Birthday அம்மத்தா , எல்லா வருஷமும் நான் தான் உனக்கு சர்பிரைஸ் கொடுப்பேன். ஆனால் இந்த வருஷம் நீ எனக்கு பெரிய சர்பிரைஸ் கொடுத்துட்ட. விஷ் பண்றதுக்கு நீ இப்போ என் கூட இல்லையே அம்மத்தா என கண்ணீருடன் உள்ள ஸ்மைலி போட்டு , லவ்  யு சோ மச் அம்மத்தா  என கூறியுள்ளார். இவரின் இந்த பதிவு பார்ப்பவர்கள் மனதையே உருக்கும் விதத்தில் உள்ளது.