பாடகி கனிகா கபூர் பிளாஸ்மாவை எடுக்க மறுத்த மருத்துவர்கள்? வெளியான அதிர்ச்சி தகவல்!

பல பாலிவூட் திரைப்படங்கள் மற்றும் மேடை நிகழ்ச்சிகளில் பாடி தன்னுடைய இனிமையான குரலால், ரசிகர்களை கவர்ந்தவர், பாடகி கனிகா கபூர். இவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு வந்தார். இதையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்த பிளாஸ்மா தானம் செய்ய உள்ளதாக அறிவித்த பாடகி கனிகா கபூரின் பிளாஸ்மாவை மருத்துவர்கள் எடுக்க மறுத்ததாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
doctor dont take to use kanika kapoor plasma shocking truth

கனிகா கபூர், கடந்த மார்ச் மாதம், லண்டன் சென்று திரும்பிய போது இவருக்கு யாரோ ஒருவர் மூலம் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக இந்த பாதிப்பு வெளிப்படவில்லை என்றாலும், சில நாட்கள் கழித்து இவருக்கு காச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து, டெஸ்ட் செய்து பார்த்தபோது கொரோனா இருப்பது உறுதியானது.

doctor dont take to use kanika kapoor plasma shocking truth

மேலும் இவர் கொரோனா தொற்றுடன்,  லண்டனில் இருந்து திரும்பி வந்த கையேடு மத்திய அமைச்சர் உள்பட 56 பேர் கலந்து கொண்ட ஒரு பிரமாண்ட விருந்தில் கலந்து கொண்டார் என்றும் கூறப்பட்டது.  பின்னர் கனிகா கபூருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த விருந்தில் கலந்து கொண்ட,  56 நபர்களும், தனிமைப்படுத்தப்பட்டு சுகாதார துறையை சேர்ந்தவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக செய்திகள் வெளியானது.

மேலும் செய்திகள்: வேலைக்காரிக்கு முத்தம்... கணவரை கும்மாங்குத்து குத்திய ஷில்பா ஷெட்டி! வீடியோ!
 
ஆனால், கனிகா கபூர் கொரோனாவில் இருந்து மீண்டு வந்ததும் இப்படி பரவிய பல தகவல்களுக்கு பதில் கொடுத்தார். அதில் தான் லண்டனில் இருந்து வந்ததும் தன்னுடைய அம்மாவை மட்டுமே சென்று சந்தித்ததாகவும், எந்த பார்ட்டிகளில் கலந்து கொள்ளவில்லை என தெரிவித்தார்.

doctor dont take to use kanika kapoor plasma shocking truth

லக்னோவில் உள்ள சஞ்சய்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று  கனிகா கபூருக்கு, நான்கு முறை கொரோனா டெஸ்ட் எடுத்ததில் பாசிட்டிவ் என வந்தது. இதையடுத்து ஐந்தாவது முறையாக எடுக்கப்பட்டதில் மட்டுமே நெகடிவ் என வந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்: அம்மாவை மிஞ்சும் அழகு... நடிகை ஸ்ரீபிரியா மகள் சினேஹாவின் உயர்ந்த லட்சியம்!
 
மூன்று கொரோனா  டெஸ்டில், நெகட்டிவ்  என வந்த பிறகே, மருத்துவ மனையில் இருந்து  டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் கனிகா கபூர். இந்நிலையில் கொரோனாவில் இருந்து மீண்டுவந்தர்களின் பிளாஸ்மா மூலம் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, பிளாஸ்மா தானம் செய்ய உள்ளதாக அறிவித்தார்.

doctor dont take to use kanika kapoor plasma shocking truth

இதையடுத்து இவருடைய பிளாஸ்மாவை மருத்துவர்கள் எடுக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இவருடைய பிளாஸ்மா மற்ற நோயாளிகளுக்கு செலுத்த ஏற்புடையதாக இல்லை என்கிற அதிர்ச்சி தகவலை மருத்துவர்கள் கூறியுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து உண்மையான தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுதுகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios