ஊரடங்கு ஓய்வு காரணமாக, பிரபலங்கள் வீட்டில் இருந்தபடி, சுவாரஸ்யமான விஷயங்களை செய்து ரசிகர்களை குஷி படுத்தி வருகிறார்கள். குறிப்பாக பாலிவுட் பிரபலங்கள் பலர், சமையல் செய்வது, வீட்டு வேலைகள் செய்வது, என பிசியாக இருக்கிறார்கள். இப்படி செய்யும் வேலைகளின்  வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிடுகிறார்கள்.  பிரபலங்கள் வெளியிடும் விடியோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் அள்ளுகிறது.

அந்த வகையில், பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி, தன்னுடைய கணவருடன் சேர்ந்து, வெளியிட்டுள்ள ஒரு டிக் டாக்  வீடியோ வெளியாகி, ரசிகர்கள் மத்தியிலும், பிரபலங்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அந்த வீடியோவில் ஷில்பா ஷெட்டி தன்னுடைய ஆடைகளை ஒழுங்கு படுத்துவதில் மிகவும் பிஸியாக  இருக்கிறார். அப்போது அவருடைய கணவர்,  ராஜ் குந்த்ரா முத்தம் கொடுக்க வருகிறார். அப்போது ஷில்பா ஷெட்டி அவரை தடுத்து தான் வேலை செய்யும் நேரத்தில்  முத்தம் கொடுக்க கூடாது என்று கூறுகிறார்.

அப்போது அங்கு வீட்டை சுத்தம் செய்து கொண்டிருக்கும்  வேலைக்காரி ’நல்லா புரியும் படி சொல்லுங்கள், நானும் பல தடவை சொல்லிவிட்டேன் கேட்க மாட்டேன் என்கிறார்’ என்று கூறி ஷில்பா ஷெட்டிக்கு அதிர்ச்சி கொடுக்கிறார்.

 பின் என்ன... ஷில்பா ஷெட்டி தனது கணவரை கும்மாங்குத்து குத்துகிறார்.  இந்த காமெடி வீடியோ சமூக வலைத்தளங்களை தெறிக்கவிட்டு வருகிறது. 

இந்த வீடியோ வெளியான ஒரு சில மணிநேரத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். அதே பிரபலங்கள் பலர், மிகவும் காமெடியான கமெண்டுகளை பதிவு செய்துள்ளனர்.

அந்த வீடியோ இதோ: