பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி, தற்போது தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நாயகிகளில் ஒருவராக இருக்கும் ரைசா, தன்னுடைய குழந்தை பருவ புகைப்படத்தை ஏலியனோடு ஒப்பிட்டு, தன்னை தானே கலாய்த்து கொண்டுள்ளார். 

பிரபல மாடலான ரைசா, உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முன்பே, நடிகர் தனுஷ் - அமலாபால் நடிப்பில், வெளியான 'வேலையில்லா பட்டதாரி' படத்தில், நடிகை கஜோலுக்கு பர்சனல் அசிஸ்டெண்டாக நடித்திருந்தார். 

இந்த படத்தில் வலுவான வேடத்தில் அவர் நடிக்க வில்லை என்றாலும், பிக்பாஸ் வீட்டின் உள்ளே சென்றதால் பிரபலமானார். இந்த படத்தில் இவர் வந்த காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் கவனிக்கப்பட்டன.

மேலும் செய்திகள்: என்ன பர்ஃபாமென்ஸ்... வாத்தி கம்மிங் பாடலுக்கு கியூட் ஆட்டம் போட்ட நயன்தாராவின் ரீல் மகள் மானஸ்வி! வீடியோ
 

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த கையேடு, நடிகர் ஹரீஷ் கல்யாணுக்கு ஜோடியாக... இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் உருவான 'பியார் பிரேமா காதல்' படத்தில் நடித்தார். முதல் படமே சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதோடு, சிறந்த அறிமுக நடிகைக்கான பல விருதுகளை பெற்று தந்தது.  அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் இவருக்கு வந்து குவிந்தது.

இந்த வருடம் மட்டும் இவரின் கை வசம், 'அலைஸ்', 'FIR', 'காதலிக்க நேரமில்லை', மற்றும் 'ஹாஷ்டேக் லவ்வர் ' ஆகிய 4 படங்கள் உள்ளன. நடிப்பு ஒருபுறம் இருந்தாலும் மாடலிங் துறையிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார் ரைசா.

மேலும் செய்திகள்: பாடகி கனிகா கபூர் பிளாஸ்மாவை எடுக்க மறுத்த மருத்துவர்கள்? வெளியான அதிர்ச்சி தகவல்!
 

எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர், தற்போது குழந்தையாக இருக்கும் போது  மொட்டை தலையுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு, ஒரே மாதிரி இருக்கிறது என, தன்னை தானே ஏலியன் என கலாய்த்து கொண்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.