சூப்பர் சிங்கர் ஜூனியர் 3 நிகழ்ச்சி மூலம் தன்னுடைய பாடல் திறமையை உலகறிய வைத்தவர் சிங்கப்பூரை சேர்ந்த தமிழ் பெண் பிரகதி. இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த அறிமுகத்தாலும், பாராட்டலும், இவருக்கு தொடர்ந்து பல படங்களில் பாடும் வாய்ப்பு கிடைத்தது.

இதுவரை 20 திற்கும் அதிகமான படங்களிலும், ஆல்பம் பாடல்களையும் பாடியுள்ளார். மேலும் மாடலாகவும் இருந்து வருகிறார். 

ஏற்கனவே இவர், பாலா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருந்ததாக கூறப்பட்ட நிலையில், திடீர் என இந்த படம் கைவிடப்பட்டது. 

இவர் மீண்டும் சினிமாவில் நடிகையாக நடிக்க உள்ளாரோ, என்கிற சந்தேகம் அனைவருக்கும் எழுந்துள்ளது. இவர் திடீர் என கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி அதன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.