ராமநாதபுரத்தில் 100 மதிப்பெண் பெற்ற மாணவர்களை கௌரவித்த ஆசிரியைகள்

ராமநாதபுரத்தில் 12ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 100 மதிப்பெண் பெற்ற மாணவிகளை பள்ளி நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து கௌரவித்தனர்.

school teachers and administrative members honour the students who scored 100 marks on 12 public exam in ramanathapuram vel

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொது தேர்வில் மாவட்டத்திலேயே அதிகப்படியான மாணவர்கள் குறிப்பாக 436 மாணவர்கள் தேர்வு எழுதியதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் முதலிடம் பிடித்த மூன்று மாணவர்களுக்கு பொன்னாடை போற்றி நினைவு பரிசுகளை ஆயிர வைசிய சபை நிர்வாகிகள் வழங்கினர். 

என் பெயரை சொல்லி மோசடியா? அதிர்ச்சியில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்; போலீஸ் விசாரணை

முன்னதாக மாணவர்களுக்கு  தலைமை ஆசிரியர் ஜஸ்டின் ஞானசேகரன்,  மாணவர்களுக்கு நன்றியினை தெரிவித்தார். தொடர்ந்து பள்ளியின் பொருளியல் ஆசிரியை அமுதா தனது பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்ற இரண்டு மாணவிகளுக்கு தனது அன்பினை வெளிப்படுத்தி அரவணைத்து பொன்னாடை போற்றி  கௌரவித்தார். 

வீட்டில் மது விற்றதை தட்டி கேட்ட நபர்; ஒட்டுமொத்த குடும்பமும் சேர்ந்து அடித்தே கொன்ற அவலம்

இதில் ஆரிய வைசிய சபை மற்றும் கல்வி குழு தலைவர் ராசி என்.போஸ் இணைத் தலைவர் பாலுசாமி, பள்ளி தாளாளர் லெனின் குமார், பொருளாளர் சதீஷ்குமார், செயலாளர் செல்வராஜ், கல்வி குழு உறுப்பினர் சுரேஷ்,பூபாலன், உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்கள் பலர் உடன் இருந்தனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios