Asianet News TamilAsianet News Tamil

கோவை சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா? நீதிபதியை வைத்து விசாரியுங்கள்.. இபிஎஸ் அதிரடி சரவெடி!

பத்திரிகை சுதந்திரம் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை வாய்ச்சவடால் விடும் திமுக அரசில் பத்திரிகையாளர்கள் தாக்கப்படுவது சர்வ சாதாரணமாகிவிட்டது. 

Savukku Shankar assaulted in Coimbatore Jail? Investigate with a judge.. Edappadi palanisamy tvk
Author
First Published May 7, 2024, 4:23 PM IST

கோவை சிறையில் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்று நீதிபதி ஒருவர் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ்:  சமூக ஊடக பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் ஒருசில சர்ச்சைக் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார் என்று குற்றம் சாட்டி கைது செய்துள்ளது காவல் துறை. அவர் தெரிவித்த கருத்துகள் தவறானதாக இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். சவுக்கு சங்கரின் வழக்கறிஞர் கோவை சிறையில் அவரை சந்தித்தப் பின் அளித்த பேட்டியில், சவுக்கு சங்கரை சிறையில் அடைப்பதற்கு முன்பு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு நல்ல நிலையில் சிறைக்கு சென்றார்.

இதையும் படிங்க: சவுக்கு சங்கருக்கு கஞ்சா சப்ளை செய்த இளைஞர் கைது!

இந்நிலையில், கோவை சிறையில் அவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். எனவே, நீதிபதி ஒருவரை நேரில் அனுப்பி சவுக்கு சங்கரின் உடல்நிலை குறித்து ஆய்வு செய்ய வேண்டி மனு அளித்துள்ளதாக வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

பத்திரிகை சுதந்திரம் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை வாய்ச்சவடால் விடும் திமுக அரசில் பத்திரிகையாளர்கள் தாக்கப்படுவது சர்வ சாதாரணமாகிவிட்டது. மேலும், பெண்களை இழிவாகப் பேசிய, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட பல திமுகவினர் மீது இந்த அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால் அவர்கள் சுதந்திரமாக நடமாடி வருகின்றனர்.

இதையும் படிங்க:  எங்களை தரக்குறைவாக பேசிய சவுக்கு சங்கரை சும்மாவிடக்கூடாது! கடுமையான நடவடிக்கை எடுக்கணும்!பெண் காவலர்கள் ஆவேசம்

சட்ட நடவடிக்கைகளும் நீதியும் அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும். சட்டத்தை காவல் துறையே கையில் எடுப்பது என்பது ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இத்தகைய தாக்குதல்கள் தவறான முன்னுதாரணமாகிவிடும். எனவே கோவை சிறையில் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்று நீதிபதி ஒருவர் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios