MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Kanakalatha Death : பார்கின்சன் நோயால் படாதபாடு பட்ட சுந்தர் சி பட நடிகை... சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

Kanakalatha Death : பார்கின்சன் நோயால் படாதபாடு பட்ட சுந்தர் சி பட நடிகை... சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

பார்கின்சன் நோயால் அவதிப்பட்டு வந்த மலையாள நடிகை கனகலதா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள சம்பவம் திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

1 Min read
Author : Ganesh A
Published : May 07 2024, 01:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

கேரள மாநிலம் மலையின்கீழு பகுதியை சேர்ந்தவர் கனகலதா. இவர் மலையாளத்தில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இதுதவிர தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்த கனகலதாவுக்கு கடந்த 2021-ம் ஆண்டு பார்க்கின்சன் நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த நோயில் இருந்து மீள்வதற்காக கடந்த மூன்று ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தார் கனகலதா.

24

நடிகை கனகலதா கடைசியாக நடித்த படம் பூக்காலம். இதையடுத்து நோய் பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து சினிமா மற்றும் சீரியல்கள் இரண்டிலும் நடிப்பதை நிறுத்திவிட்டார். ஒருகட்டத்தில் சிகிச்சைக்கு பணமின்றி தவித்த கனகலதாவிற்கு கேரள திரைப்பட சங்கமான அம்மா உதவிக்கரம் நீட்டியது. அதன்மூலம் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார் கனகலதா.

இதையும் படியுங்கள்... அன்று திரைப்படங்களில் நடிக்க தடை.. பிரேக் அப் ஆன நிச்சயதார்த்தம்.. ஆனா இன்று பான் இந்தியா நடிகை..

34

நடிகை கனகலதா தமிழிலும் சுந்தர் சி நடிப்பில் வெளிவந்த இருட்டு படத்தில் நடித்திருந்தார். இப்படத்தை வி இசட் துரை இயக்கினார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த கனகலதா அதன்பின்னர் தமிழ் சினிமா பக்கம் தலைகாட்டவே இல்லை. இதனிடையே பார்க்கின்சன் நோயால் அவதிப்பட்டு வந்த கனகலதா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 63.

44

நடிகை கனகலதாவின் மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர். நடிகை கனகலதா சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் நடித்து வந்துள்ளார். அவரின் மறைவு மலையாள திரையுலகிற்கு பேரிழப்பாக கருதப்படுகிறது.

இதையும் படியுங்கள்... நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு... கர்ப்பகாலத்தில் கணவர் செய்த உதவியால் அமலா பால் நெகிழ்ச்சி

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved