பாகுபலி  படத்திற்காக, நான்கு வருடங்களுக்கு மேல் எந்த படத்திலும் கமிட் ஆகி நடிக்காமல் இருந்த, நடிகர் பிரபாஸ், பாகுபலி வெற்றிக்கு பின் நடிக்க ஒப்புக்கொண்ட திரைப்படம் 'சாஹோ'.

பிரமாண்ட பொருட்செலவில் உருவாகி உள்ள இந்த படத்தில் பிரபாஸ் நடித்து முடிக்க இரண்டு வருடங்கள் ஆனாது. தற்போது படப்பிடிப்புகள் முழுவது முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

பிரபாஸ் ரசிகர்கள் அனைவராலும், அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்த படத்தை, சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளதாக, 'சாஹோ' படத்தை தயாரித்து வரும் யூவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளது. 

பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஷராதா கபூர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாப்பாத்திரத்தில், நீல் நிதிஷ் குமார், அருண்விஜய், மந்த்ராபேடி,உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை சுஜித் இயக்கியுள்ளார்.,