பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல் நாளில் இருந்தே சர்ச்சை ராணியாக வலம் வந்தவர் மீரா மிதுன். தேவையில்லாமல் சேரன் மீது பொய் குற்றச்சாட்டை சொல்லி, கேரியருக்கு ஆப்பு வைத்துக்கொண்டார். இதனையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் நீக்கப்பட்ட மீரா மிதுன், வரிசையாக ஏற்கனவே கமிட் செய்யப்பட்டிருந்த படவாய்ப்புகளையும் இழந்தார். 

ஆனால் எப்படியாவது ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்ற வெறியில் தனது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் உடலை அப்பட்டமாக காட்டி படுகவர்ச்சியாக புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் மீரா மிதுன். டூப்பீஸ், கர்சீப் சைஸ் டிரஸ், முன்னழகு மொத்தமும் தெரிய முரட்டு போஸ் என இனி காட்ட ஒன்றுமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு எல்லாத்தையும் காட்டிவிட்டார். 

இதையும் படிங்க: அட்லிக்கு ஆப்பு வைத்த லோகேஷ் கனகராஜ்... தளபதியை “மாஸ்டர்” பிளான் போட்டு தூக்கிட்டார் போல...!

சமீபத்தில் பாலிவுட் நடிகைகள் கூட என் போட்டோ ஷூட்டை காப்பியடிக்கிறார்கள் என காமெடி செய்து நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டார். முதலில் ஜாடையாக நயன்தாராவிடம் வம்பிழுத்த மீரா மிதுன், அடுத்து நேரடியாக விஜ்ய்யிடம் மோதி மூக்கை உடைத்துக்கொண்டார். இந்நிலையில் ஆபாச இணையதளங்களில் தனது புகைப்படத்தை மார்ஃப் செய்யப்பட்ட நிர்வாண புகைப்படங்கள் பதிவிடப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்துள்ள மீரா மிதுன், துளிகூட வெட்கமே இல்லாமல் செய்துள்ள காரியம் நெட்டிசன்களை கடுப்பாக்கியுள்ளது. 

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மீரா மிதுன். தனது புகைப்படங்களை மார்ஃப் செய்து நிர்வாண போட்டோக்களாக மாற்றி, சில ஆபாச வெப்சைட்டுகளில் சில விஷமிகள் பகிர்ந்துள்ளதாகவும், சைபர் கிரைம் இதனை தடுக்காமல் என்ன செய்கிறது என்றும் மாடல் அழகி மீரா மிதுன், தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது பதிவிட்டுள்ளார். 

இதையும் படிங்க: தமிழ் சினிமாவை தட்டித்தூக்கும் சன்பிக்சர்ஸ்... 1000 கோடி பட்ஜெட்டில் போட்ட மெகா பிளான்...!

மேலும் அந்த  ஆபாச இணையதளங்களில் தனது செல்போன் நெம்பர் பகிரப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள மீரா மிதுன், மார்ஃபிங் செய்யப்பட்ட தனது ஆபாச புகைப்படங்களையும் அத்துடன் ஷேர் செய்துள்ளார். இதை எல்லாம் போதாது என்று அந்த ஆபாச புகைப்படங்களுடன் இருக்கும் ட்வீட்டை பிரதமருக்கும் டேக் செய்திருப்பது பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அவங்க பண்ணது கூட தெரியாது நீங்க பண்றது தான் நல்லா தெரியுது என்று கலாய்த்து வருகின்றனர்.