''தர்பார்'' படத்திற்கு பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ''அண்ணாத்த''. இதில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மீனா நடிப்பதாகவும், வில்லியாக குஷ்புவும், வக்கீலாக நயன்தாராவும், தங்கையாக கீர்த்தி சுரேஷும் நடிப்பதாக கூறப்படுகிறது. 

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்து வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் முத்து, அண்ணாமலை படம் போல இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று கூறப்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக  எப்படிப்பட்ட படமாக இருந்தாலும் அதை பட்டி, தொட்டிகளுக்கும் கொண்டு சேர்ப்பதில் சன் பிக்சர்ஸை பிஞ்ச முடியாது.

அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தொடர்ந்து, முன்னணி நடிகர்களான விஜய் சேதுபதி, சூர்யா, சிவகார்த்திகேயன் ஆகியோரை வைத்து, கிட்ட தட்ட 1000 கோடி பட்ஜெட்டில் அடுத்தடுத்து படங்களை தயாரிக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாம். தற்போது கொரோனா பீதியால் திரைத்துறை பாதிக்கப்பட்டுள்ளதால், புதிய படங்கள் குறித்த அறிவிப்பை நிறுத்தி வைத்துள்ளதாம். அதுவரை முன்னணி ஹீரோக்களுக்கு பொருத்தமான கதைகளை தேர்வு செய்யும் பணியில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தீவிரமாக இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.