பழிக்கு பழி தீர்க்குமா சென்னை? ஓரங்கட்டப்பட்ட ரச்சின் ரவீந்திரா – டாஸ் வென்ற லக்னோ பவுலிங்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2024 தொடரின் 39ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் கேப்டன் கேஎல் ராகுல் பவுலிங் தேர்வு செய்தார்.
Chennai Super Kings vs Lucknow Super Giants, 39th Match
சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான 39ஆவது லீக் போட்டி நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற லக்னோ கேப்டன் கேஎல் ராகுல் பவுலிங் தேர்வு செய்வதாக அறிவித்தார். லக்னோ அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. மேலும், சிஎஸ்கே அணியில் ரச்சின் ரவீந்திரா நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக டேரில் மிட்செல் அணியில் இடம் பெற்றுள்ளார்.
Chennai Super Kings vs Lucknow Super Giants, 39th Match
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்:
குயீண்டன் டி காக், கேஎல் ராகுல் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், தீபக் கூடா, நிக்கோலஸ் பூரன், ஆயூஷ் பதோனி, குர்ணல் பாண்டியா, மேட் ஹென்றி, ரவி பிஷ்னோய், மோசின் கான், யாஷ் தாகூர்.
சென்னை சூப்பர் கிங்ஸ்:
அஜிங்க்யா ரஹானே, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), டேரில் மிட்செல், மொயீன் அலி, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, முஷ்தாபிஜூர் ரஹ்மான், மதீஷா பதிரனா
Chennai Super Kings vs Lucknow Super Giants, 39th Match
இதுவரையில் சிஎஸ்கே விளையாடிய 7 போட்டிகளில் 4ல் வெற்றியும், 3ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளது. இதே போன்று லக்னோ விளையாடிய 7 போட்டிகளில் 4ல் வெற்றியும், 3ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளது. இதற்கு முன்னதாக இரு அணிகளும் மோதிய 4 போட்டிகளில் 2ல் லக்னோ அணியும், ஒரு போட்டியில் சிஎஸ்கே அணியும் வெற்றி பெற்றுள்ளன.
Chennai Super Kings vs Lucknow Super Giants, 39th Match
ஒரு போட்டிக்கு முடிவு இல்லை. இந்த சீசனில் நடந்த 34 ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தியது. லக்னோவில் நடந்த இந்த போட்டியைத் தொடர்ந்து தற்போது இரு அணிகளும் சென்னையில் மோதுகின்றன. இந்த சீசனில் சென்னையில் நடந்த 3 போட்டியிலும் சிஎஸ்கே வெற்றி பெற்றது. இன்று நடக்கும் 4ஆவது போட்டியிலும் சிஎஸ்கே வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Chennai Super Kings vs Lucknow Super Giants, 39th Match
மேலும், எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் மொத்தமாக 79 போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது. இதில், சிஎஸ்கே 67 போட்டிகளில் விளையாடி 48 போட்டிகளில் வெற்றியும், 18 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது.