'பிக்பாஸ் சீசன் 7' நிகழ்ச்சியில் இருந்து நேற்றைய தினம் வெளியேறிய வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா பிரபல நடிகரை விமான நிலையத்தில் சந்தித்த வீடியோவை வனிதா தற்போது வெளியிட்டுள்ளார். 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு, அவ்வளவு எளிதில் யாருக்கும் கிடைத்து விடுவதில்லை. திரைப்பட நடிகர்கள், சீரியல் பிரபலங்கள் தியேட்டர் ஆர்டிஸ்ட், மாடல், பாடகர், டான்சஸ், என ஏதேனும் ஒரு துறையில் சிறந்து விளங்குபவர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் விளையாட்டு களமாக உள்ளது. கடந்த முறை பொதுமக்களில் ஒருவர் பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்படுவார் என்கிற கேட்டகிரியில் டிக் டாக் மூலம் பிரபலமான தனலட்சுமி உள்ளே சென்றார்.

60 நாட்களுக்கு மேல் அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த போதிலும், இவரால் ஏனோ இதுவரை திரைப்பட வாய்ப்புகளை கைப்பற்ற முடியவில்லை. அதேபோல் மற்ற பிரபலங்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து கொண்டாலும், தனலட்சுமியை மட்டும் ஏனோ... அசீமை தவிர அனைவரும் தவிர்த்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Pavithra Lakshmi: சேலை மாராப்பை விளக்கி... கல் பதித்த ஜாக்கெட் அழகை காட்டி இளம் நெஞ்சை அப்செட் செய்த பவித்ரா!

இந்த முறை அது போன்ற எந்த ஒரு ஆப்ஷனும் இடம்பெறவில்லை என்றாலும், வனிதா விஜயகுமாரின் மகள் என்கிற அடிப்படையில் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தவர் ஜோவிகா. இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மிகவும் குறைந்த வயது போட்டியாளரும் இவரே. பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த ஓரிரு வாரங்களிலேயே, அனைத்து ரசிகர்களின் கவனத்தையும் ஈத்த இவர்... மிகவும் சாமர்த்தியமாக விளையாடி வந்தார். பலரும் 18 வயதே ஆகும் ஜோவிகா இந்த அளவுக்கு மெச்சூடாக விளையாடி வருவதை புகழ்ந்து தள்ளினர். 

காதலிக்காக கூலி வேலை.! காதல் கோட்டை படத்தை மிஞ்சிய கோலங்கள் சீரியல் நடிகர் அபிஷேக் சங்கரின் லவ் ஸ்டோரி!

ஆனால் மாயா - பூர்ணிமா உடன் கூட்டணி வைத்த பின்னர், ஜோவிகாவின் விளையாட்டு திசை மாறியது. மேலும் அவர் பலரை மரியாதை இல்லாமல் வாடா... போடா.. என பேசுவதற்காக கமலஹாசன் பலமுறை ஜோவிகாவை கண்டித்தார். கடந்த இரண்டு மூன்று வாரங்களாகவே யாரையும் மரியாதை இல்லாமல் பேசிவிடக்கூடிய கூடாது என்பதில் கான்சியஸ் ஆக விளையாடியதால், மிகவும் சைலன்ட் ஆகவே இருந்தார் ஜோவிகா. இதுவே இவர் இந்த வாரம் வெளியேறுவதற்கு வழி வகுத்தது. பைனல் வரை செல்வார் என எதிர்பார்த்த ஜோவிகா இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

இந்நிVijay: விஜயகாந்த் செஞ்சதெல்லாம் மறந்து போச்சா? சூர்யா செஞ்சதை கூட செய்யாத தளபதி.. புலம்பும் ரசிகர்கள்!

லையில், 'பிக்பாஸ்' வீட்டை விட்டு வெளியேறிய உடனேயே பிரபல இயக்குனர் பார்த்திபனை சந்தித்து ஆசி பெற்றுள்ளார். இது குறித்த வீடியோவை வனிதா விஜயகுமார் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஏர்போர்ட்டில் இருந்து பார்த்திபன் வெளியே வரும்போது அவரை ஜோவிகா சந்தித்துள்ளார். பார்த்திபனுடன் அவருடைய மகளும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. பார்த்திபனிடம் ஜோவிகா துணை இயக்குனராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இரண்டு தெலுங்கு படங்களிலும் ஜோவிகா நடிக்க உள்ளதாக வனிதா கூறி உள்ளார். எனவே விரைவில் அந்த படங்களின் அறிவிப்பு குறித்த தகவல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

View post on Instagram