மும்பையின் பிரபல மாடலும், தொலைக் காட்சித் தொடர்களின் நடிகருமான கரண் ஓபராயை மும்பை போலீஸார் இன்று நண்பகலில் கற்பழிப்பு வழக்கில் கைது செய்துள்ளனர்.

கரண் ஓபராய். கார்,பைக் மற்றும் ஃபேஷன் ஷோக்களில் முன்னணி மாடல். ‘ஜஸ்சி ஜைஸி கொயி நஹி’ என்ற டி.வி. தொடர் மூலம் மிகவும் பிரபலமானவர். பாடகருமான இவர் ‘பாண்ட் ஆஃப் பாய்ஸ்’ என்கிற இசைக்குழுவின் முக்கிய அங்கமும் கூட.

இன்று காலை மும்பை ஓஷிவாரா பகுதி காவல் நிலையத்தில் கரண் ஓபராய் மீது புகார் செய்த இளம்பெண், அவர் தன்னைக் கற்பழித்ததோடு நில்லாமல் அதை வீடியோவும் எடுத்து தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டி வந்ததாகவும் அப்படிப் பணம் தராவிட்டால் அந்த வீடியோவை வலைதளங்களங்களில் வெளியிடப்போவதாக மிரட்டியதாகவும் கூறியிருந்தார்.

இந்தப் புகாரின் மீது எஃப்.ஐ.ஆர். போட்ட போலீஸார் கரண் ஓபராய் மீது இபிகோ 376,384 ஆகிய செக்‌ஷன்களில் பதிவு செய்து அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் மிஸ் பண்ணாதீங்க..பன்றி மேய்க்க வேண்டாமென்றே திமுகவுக்கு வந்தேன்... செந்தில் பாலாஜி பகீர்..!