வாரிசு படத்தில் இடம் பெற்றுள்ள ரஞ்சிதமே பாடலுக்கு திரையரங்கு ஒன்றில் பாட்டி குத்தாட்டம் போடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா ஆகியோரது நடிப்பில் கடந்த 11 ஆம் தேதி திரைக்கு வந்த படம் வாரிசு. முழுக்க முழுக்க குடும்பக் கதையை முன்னிட்டு உருவான இந்தப் படத்திற்கு போட்டியாக அஜித்தின் துணிவு படம் வெளியானது. வாரிசு படத்தை விட துணிவு படத்திற்கு தமிழகத்தில் அதிக திரையரங்குகள் கிடைத்துள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் வாரிசு படம் ரூ.63 கோடி வரையில் வசூல் குவித்தது. உலகம் முழுவதும் ரூ.100 கோடிக்கும் அதிகமாகவே வசூல் கொடுத்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

எம்மாடியோவ் புதிய பிளான் போட்ட த்ரிஷா: விஜய் வீட்டிற்கு அருகிலேயே ரூ.35 கோடியில் பிரமாண்ட வீடு!

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் நிறுவனத்தின் மூலமாக தில் ராஜூ தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இவரது இசையில் வந்த ரஞ்சிதமே, தீ தளபதி, ஜிமிக்கு பொண்ணு, வா தலைவா ஆகிய பாடல்கள் ரசிகர்களிடையே ஏகபோக வரவேற்பு பெற்றன. திரையரங்குகளில் ரஞ்சிதமே பாடலுக்கும் குத்தாட்டம் போடும் வீடியோ தான் அவ்வப்போது சமூக வலைதளங்களில் உலா வருகிறது. அப்படி ஒரு வீடியோ தான் டிரெண்டாகி வருகிறது. வயது வித்தியாசமில்லாமல், இடம் பொருள் ஏவல் என்று எதுவுமில்லாமல் திரையரங்கில் வயதான பாட்டி ஒருவர் ரஞ்சிதமே பாடலுக்கு குத்தாட்டம் போடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாட்டியுடன் சேர்ந்து கொண்டு சிறுசுகளும், இளைஞர்களும் டான்ஸ் ஆடும் காட்சியும் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

AK62: அஜித்துக்கு ஜோடியாக நடிக்கும் ஐஸ்வர்யா ராய்?

வாரிசு படத்தைத் தொடர்ந்து மாஸ்டர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் 2ஆவது முறையாக இணைந்து தளபதி67 படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருவதாக இயக்குநரும், நடிகருமான மனோபால குறிப்பிட்டிருந்தார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். இதற்கு முன்னதாக இருவரும் கில்லி, திருப்பாச்சி, குருவி, ஆதி ஆகிய படங்களில் நடித்திருந்தனர். மேலும், மன்சூர் அலிகான், கௌதம் மேனன் ஆகியோர் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

பகவதி ஸ்டைலில் உருவாகும் தளபதி67: டீக்கடை ஓனராக நடிக்கும் விஜய்?

AK62: இது நெட்பிளிக்ஸ் பண்டிகை: ஜில்லா ஜில்லா தான் முடியாமல் போய்விட்டது: டுவிட்டரில் டிரெண்டாகும் AK62!

Scroll to load tweet…