Asianet News TamilAsianet News Tamil

பகவதி ஸ்டைலில் உருவாகும் தளபதி67: டீக்கடை ஓனராக நடிக்கும் விஜய்?

விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி67 படம் பகவதி படம் போன்று உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது.

Vijay Acting as a Tea Shop Owner in Thalapatht67 Movie?
Author
First Published Jan 16, 2023, 1:17 PM IST

விஜய், ராஷ்மிகா மந்தனா ஆகியோரது நடிப்பில் உருவான வாரிசு படம் கடந்த 11 ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது. என்னதான குறைவான படங்களில் வெளியாகியிருந்தாலும், அஜித்தின் துணிவு படத்திற்கு இணையாக அதிக வசூல் குவித்து சாதனை படைத்துள்ளது. வெறும் 5 நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ.63 கோடி வரையிலும், உலகம் முழுவதும் ரூ.100 கோடிக்கும் அதிகமாகவே வசூல் குவித்துள்ளது.

AK62: இது நெட்பிளிக்ஸ் பண்டிகை: ஜில்லா ஜில்லா தான் முடியாமல் போய்விட்டது: டுவிட்டரில் டிரெண்டாகும் AK62!

வாரிசு படத்தை தயாரித்த தில் ராஜூ இந்தப் படத்தின் வெற்றியை கொண்டாடி வருகிறார். முழுக்க முழுக்க குடும்பக் கதையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டிருந்தது. விஜய் நடிப்பில் வந்த பீஸ்ட் படம் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் கதையை மையப்படுத்தி வெளியாகி இருந்த நிலையில், இந்தப் படம் குடும்பக் கதையை மையப்படுத்தி வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு பாடல்களும் ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

பொங்கல் வின்னர் அஜித்தின் துணிவா - விஜய்யின் வாரிசா? ரெட் ஜெயிண்ட் மூவிஸ் போட்ட பரபரப்பு ட்வீட்!

துணிவு திரைப்படத்தின் தமிழகத்தின் ஒட்டு மொத்த வெளியீட்டு உரிமையையும், 'வாரிசு' திரைப்படத்தை தமிழகத்தில் சில பகுதிகளிலும் வெளியிட்ட ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம், பொங்கல் வின்னர் யார் என்பது குறித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அஜித்தின் 'துணிவு' மற்றும் விஜய்யின் 'வாரிசு' ஆகிய இரண்டு படங்களுமே வெற்றிப் படங்கள் தான் என நடுத்தரமாக தன்னுடைய பதிவை பதிவிட்டுள்ளது. இது விஜய் மற்றும் அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. மஞ்சள் நிற பட்டு புடவையில் பொங்கல் பிரபல ஹீரோயினுடன் பொங்கல் வைத்த கீர்த்தி சுரேஷ்!

இந்த நிலையில் வாரிசு படத்தைத் தொடர்ந்து விஜய் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் 2ஆவது படமான தளபதி67 படத்தில் விஜய் 46வயது நிரம்பிய டீக்கடைக்காரராக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டீக்கடை ஓனராக பகவது படத்தில் நடித்தது போன்று நடிப்பதாக சொல்லப்படுகிறது. பகவதி படத்தில் விஜய் டீக்கடை நடத்தி வரும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு தனது தம்பியை கொலை செய்ய, தான் ஒரு ரௌடியாக அவதாரம் எடுத்தார்.

'RRR' படம் பார்த்த இரண்டு முறை ஜேம்ஸ் கேமரூன்..! ராஜமௌலி என்ன சொன்னார் தெரியுமா? வைரல் பதிவு!

அதே போன்று தான் தளபதி67 படமும் சின்ன சின்ன மாற்றத்தோடு உருவாவதாக சொல்லப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையோடு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வந்தது. இன்னும் 10 நாட்களுக்குள் தளபதி67 படத்தின் அப்டேட் வெளியாகும் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார். இந்தப் படத்தில் விஜய்யுடன் இணைந்து த்ரிஷா, மன்சூர் அலிகான், கௌதம் மேனன் ஆகியோர் பலர் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

எனினும், தளபதி67 படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்பது குறித்து முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்வதாக சொல்லப்படுகிறது. தளபதி67 படம் வரும் அக்டோபர் 19 ஆம் தேதி திரைக்கு வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios